தமிழகத்தில் அக்.10 வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் அக்.10 வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அக்.10 வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அக்.10 வரை வெளுத்து வாங்கப்போகும் கனமழை – வானிலை அறிக்கை!

தமிழக கடலோர பகுதியை ஓட்டி நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிக கன மழையும்‌ வேலூர்‌, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெருமபாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

புதிய ரே‌ஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!

07.10.2021: வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

08.10.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌, தர்மபுரி, சேலம்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌.

09.10.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

விருதுநகரில் நாளை (அக்.7) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

10.10.2021: வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, சேலம்‌, ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அபிக்கடல்‌ பகுதிகள்‌:

06.10.2021: லட்சத்தீவு மற்றும்‌ மாலத்தீவு கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 லோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!