தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தினால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்க கூடும் என்ற தகவலும், இதனால் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விடுப்பு பற்றியும் இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌:

தமிழகத்தின்‌ மேல்‌ நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று மே 28 தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. இதை தொடர்ந்து மேலும் நாளை மே 28 ,மே 29 மற்றும் மே 30, மே 31, ஜூன் 1 ந் தேதிகளிலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், அந்நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Exams Daily Mobile App Download

இவ்வாறு தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 39 – 40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்றைய நாளான மே 28ல் இலங்கை மற்றும்‌ அதனை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும், மே 29 மாற்று மே 30 அன்று இலட்சத்தீவு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்‌, தென்தமிழ கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும் வீசக்கூடும்‌. இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!