தமிழ்நாட்டில் ஜூலை 30 வரை ‘இந்த’ மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழ்நாட்டில் ஜூலை 30 வரை 'இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழ்நாட்டில் ஜூலை 30 வரை 'இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழ்நாட்டில் ஜூலை 30 வரை ‘இந்த’ மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

27.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் பொதுத்தேர்வு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!

28.07.2021 முதல்‌ 30.07.2021 வரை: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல்‌ பகுதிகள்‌:

26.07.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்ல அறிவுறுத்தப்படுகறார்கள்‌.

26.07.2021 முதல்‌ 28.07.2021 வரை: வடகிழக்கு, மத்‌திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

29.07.2021, 30.07.2021: வட மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

26.07.2021 முதல்‌ 30.07.2021 வரை: தென்‌ மேற்கு, வடக்கு மற்றும்‌ மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!