CWC மத்திய நீர் ஆணையத்தில் வேலை – ரூ.63200/- சம்பளம் !
மத்திய நீர் ஆணையத்தில் (CWC) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Storekeeper பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Central Water Commission |
பணியின் பெயர் | Storekeeper |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய நீர் ஆணைய காலிப்பணியிடங்கள்:
மத்திய நீர் ஆணையத்தில் Storekeeper பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Central Water Commission வயது வரம்பு:
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
மத்திய நீர் ஆணைய கல்வித்தகுதி :
- மத்திய/ மாநில அரசு துறைகளில் வழக்கமாமனா அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பம் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.