தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

0
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

தமிழகத்தில் கடந்த வாரம் முதல் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19.07.2021:

நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

20.07.2021:

நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

21.07.2021 முதல் 23.07.2021:

நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

TN Job “FB  Group” Join Now

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

19.07.2021 முதல் 23.07.2021:

தெற்கு வங்கக் கடல் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

19.07.2021 முதல் 20.07.2021

தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 335 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

19.07.2021 முதல் 23.07.2021:

கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

19.07.2021 முதல் 23.07.2021:

வடக்கு அரபிக்கடல், தென் மேற்கு அரபிக்கடல் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 6- கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். . மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!