தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழகத்தில் இன்று தமிழகம்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌. தஞ்சாவூர்‌, நாகப்பட்டினம்‌, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, மயிலாடுதுறை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய கூடும்‌.

13.08.2021: தமிழகம்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யகூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய கூடும்‌.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் முழு ஊரடங்கு அமல்?

14.08.2021: தமிழகம்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌. நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய கூடும்‌.

15.08.2021: தமிழகம்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌.

16.08.2021: தமிழகம்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஓட்டி பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

12.08.2021, 13.08.2021: தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர் வேகத்துடனும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்துடனும் வீசக்கூடும்‌.

14.08.2021 முதல்‌ 16.08.2021 வரை: தெற்கு மற்றும்‌ மத்‌இய மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர் வேகத்துலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்துடனும் வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல் பகுதிகள்:

12.08.2021 முதல்‌ 16.08.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்இய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 5௦ முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்துடனும் இடை இடையே 70 கிலோமீட்டர் வேகத்துடனும் வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!