தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நிறுத்தி வைத்திருந்தனர். கொரோனா தொற்று சற்று கட்டுக்குள் வந்ததால் அரசு அடுத்தடுத்து வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் தமிழ்நாடு அங்கன்வாடியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு பட்டதாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மொத்த காலிப்பணியிடங்கள்:

Financial Management – Specialist (01), Accountant(02), Project Associate (01), Secretarial Assistant / Data entry operator(01) ஆகிய 5 பணியிடங்கள் காலியாக உள்ளது.

1.பணி : பைனான்சியல் மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் ( Financial Management -Specialist)

காலிப்பணியிடங்கள் : 01

பணிக்கான சம்பளம்: ரூ.60000

விண்ணப்பதாரரின் வயது வரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பதாரரின் தகுதி: சிஏ, சிஎஸ், சிஎம்ஏ அல்லது எம்பிஏ பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த மார்னஸ் லாபுஷான் – விராட் கோஹ்லி பின்னடைவு!

2.பணி: அக்கவுண்டன்ட் (Accountant )

காலிப்பணியிடங்கள் : 02

பணிக்கான சம்பளம் : ரூ.30000

விண்ணப்பதாரரின் வயது வரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பதாரரின் தகுதி: வணிகவியல், கணக்கியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது சிடபிள்யூஏ இண்டெர்/ சிஏ இண்டெர் ஆகிய படிப்புகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

3.பணி : புராஜெக்ட் அசோசியேட் (Project Associate)

காலிப்பணியிடங்கள் : 01

பணிக்கான சம்பளம்: ரூ.25000

விண்ணப்பதாரரின் வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பதாரரின் தகுதி: கணினி அறிவியல் அல்லது ஐடி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

4. பணி: செக்ரட்ரியல் அசிஸ்டெண்ட் / டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Secretarial Assistant / Data entry operator)

காலிப்பணியிடங்கள் : 01

பணிக்கான சம்பளம்: ரூ.15,000

விண்ணப்பதாரரின் வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் தகுதி: ஏதாவது ஒரு துறையில் டிகிரி கட்டாயம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.icds.tn.gov.in/  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து  அஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 24-12-2021

மேலும் விவரங்களுக்கு: https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Terms_of_Recruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here