ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த மார்னஸ் லாபுஷான் – விராட் கோஹ்லி பின்னடைவு!

0
ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த மார்னஸ் லாபுஷான் - விராட் கோஹ்லி பின்னடைவு!
ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த மார்னஸ் லாபுஷான் - விராட் கோஹ்லி பின்னடைவு!
ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த மார்னஸ் லாபுஷான் – விராட் கோஹ்லி பின்னடைவு!

2021 ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்பு ICC டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்தில் இருந்த மார்னஸ் லாபுஷான் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் 6வது இடத்தில் இருந்த இந்திய டெஸ்ட் அணி கேப்டன் தற்போது வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார்.

மார்னஸ் லாபுஷான் முதலிடம்:

ஆஸ்திரேலியா vs இந்தியா ஆஷஸ் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷான் உலக டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்தில் இருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2 ஆஷஸ் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மார்னஸ் லாபுஷான். இரு போட்டிகளிலும் 1 சதம் மற்றும் 2 அரை சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் பெற்று இருந்த டாப் 1 இடத்தை தற்போது லாபுஷான் பெற்றிருக்கிறார்.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளி வேலை நேரம்! முக்கிய தகவல்!

அதிக காலம் டாப் 1 பேட்ஸ்மேனாக திகழ்ந்த இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக சரியான பார்மில் இல்லாத காரணத்தினால் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார். விராட் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து அதிக போட்டிகளான நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் 2 டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு சதம் அடிக்க வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 26ம் தேதி தொடங்கவிருக்கும் இப்போட்டிக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.4,500 வரை ஊதிய உயர்வு – குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை!

917 புள்ளிகள் பெற்று லாபுஷான் முதல் இடத்தை பெற்றுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 897 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பவுலிங்கில் ICC டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2வது இடத்திலும் நீடித்து வருகின்றனர். ICC ஒரு நாள் போட்டி தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் முதல் இடத்தில் உள்ளார். T20 போட்டியில் இங்கிலாந்து வீரர் மாலன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!