தமிழகத்தில் 3 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு – அதிகாரிகள் ஆலோசனை!!
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பை தவிர்த்து மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வந்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு பின்பு மாணவர்களின் நலன் கருதி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் அனைவரும் கல்வி கற்று வந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்ததால் ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் உயர்கல்வி வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த மாதம் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு!!
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடப்பது போல் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 3 வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனை மதுரையில் சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.