தமிழக “நம்ம ஸ்கூல் திட்டம்” .. அரசின் நூதன அழைப்பு!

0
தமிழக
தமிழக "நம்ம ஸ்கூல் திட்டம்" .. அரசின் நூதன அழைப்பு!
தமிழக “நம்ம ஸ்கூல் திட்டம்” .. அரசின் நூதன அழைப்பு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த “நம்ம ஸ்கூல்”- நம்ம ஊரு பள்ளி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு உதவ பொதுமக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

நம்ம ஸ்கூல் திட்டம்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு நிதி வசூலிக்க, “நம்ம ஸ்கூல்”- நம்ம ஊரு பள்ளி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் அரசு பள்ளிகளுக்கு நிதி அளிப்பது, பொருட்களாக வழங்குவது அரசு பள்ளிகளின் அடிப்படை தேவைகளை சமூக பங்களிப்புடன் நிறைவேற்றலாம்.

 

மேலும் இந்த திட்டத்திற்காக இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி சிறு, குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவியை வழங்கலாம். இந்நிலையில் நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு உதவ பொதுமக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புதிய வகையில் அழைப்பு விடுத்துள்ளார். அதில் பள்ளிக்கூடம் என்பது நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை அறிந்து, அந்த பள்ளிக் கூடத்திற்கு உங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!