பெண்களுக்கான சிறப்பு பேருந்து கட்டண சலுகை – இன்று முதல் அமல்!

0
பெண்களுக்கான சிறப்பு பேருந்து கட்டண சலுகை - இன்று முதல் அமல்!
பெண்களுக்கான சிறப்பு பேருந்து கட்டண சலுகை - இன்று முதல் அமல்!
பெண்களுக்கான சிறப்பு பேருந்து கட்டண சலுகை – இன்று முதல் அமல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் எம்எஸ்ஆர்டிசி நடத்தும் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

பேருந்து கட்டணம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். அதாவது, பள்ளி குழந்தைகளில் இருந்து, வேலைக்கு செல்லும் பெண்கள் வரை என அனைவரும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திற்கு அடுத்ததாக பல மாநிலங்களில் பெண்களுக்கு பேருந்து கட்டண சலுகை வழங்க ஆரம்பித்துவிட்டனர்.

திரைப்படங்களுக்கு தமிழ் பெயர் – கேளிக்கை வரி விலக்கு விவகாரம்.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

இந்நிலையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் மஹிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (எம்எஸ்ஆர்டிசி) நடத்தும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு 50% கட்டண சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எம்எஸ்ஆர்டிசி யின் கீழ் 15000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கிறது. இதனால், நாள் ஒன்றிற்கு மட்டுமே இந்த திட்டத்தினால் லட்சக்கணக்கான பயணிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!