தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் கவனத்திற்கு – இன்று முதல் இலவசம்!

0
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் கவனத்திற்கு - இன்று முதல் இலவசம்!
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் கவனத்திற்கு - இன்று முதல் இலவசம்!
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் கவனத்திற்கு – இன்று முதல் இலவசம்!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவகு செலுத்தப்படும் கட்டண தொகையை இன்று (ஜூலை 15) முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டண விலக்கு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த வாரியத்தில் சில சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், உறுப்பினராக சேருபவர்கள் அதற்கான கட்டணத்தை கட்ட வேண்டியதில்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு வணிகர்கள் நலனுக்காக கடந்த 1989 ஆம் ஆண்டு முதன் முதலாக ’தமிழ்நாடு வணிகர் நல வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அனைத்து வகையான மதுபானங்களும் 20% விலை உயர்வு – இன்று முதல் அமல்!

இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக செயல்பட்டு வருபவர்களுக்காக ஏழு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது குடும்பநல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, விளையாட்டுப் போட்டி, தீவிபத்து, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட சேவைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 2021 மே மாதம் 31ஆம் தேதி வரை 8,873 உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர். இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான செலவினத்தொகை 3.05 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு இணையவழி முறையை கடந்த ஜூன் 16 ஆம் தேதி அன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துவங்கி வைத்தார். அதன் கீழ் tn.gov.in./tntwb/tamil என்ற இணையதளம் மூலம் வணிகர்கள் இணையவழி சேவையை பெற்று வருகின்றனர். இதில் சிக்கல்கள் ஏற்படின் வணிகவரி வரிவிதிப்பு அலுவலகத்தை நேரில் சென்று அணுகலாம் எனவும், அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வணிகர் நல வாரியத்தை சீரமைத்து புதிய உறுப்பினர் சேர்க்கையை சிறப்பாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டத்தில் பதிவு பெற்ற அல்லது பதிவு பெறாத, 40 லட்ச ரூபாய் வரை விற்று முதல் அளவு பெற்று வரும் சிறு வணிகர்கள், குறு வணிகர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கு ரூ.500 கட்டணத் தொகையை அடுத்த மூன்று மாதங்கள் செலுத்த வேண்டாம் என விலக்கு அளித்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here