தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய உத்தரவு!
தமிழக அரசின் கேபிள் டிவி செட்டா பாக்ஸ் பழுதடைந்தாலோ அதை நீங்கள் மாற்ற நினைத்தாலோ அரசு செட்டாப் பாக்சை உரிய அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டரிடம் வழங்க வேண்டும் என தமிழக தொழில்நுட்பவியல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு கேபிள் டிவி செட்டா பாக்ஸ்:
தமிழக அரசு செட்டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டு பெறலாம். 200க்கும் மேற்பட்ட சேனல்களை பொதுமக்களுக்கு ரூ.140 + ஜிஎஸ்டி என்ற குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற நிறுவனங்களை விட மிக குறைத்த தொகையாகும்.
தனிநபர் கடன்களுக்கு குறைந்த அளவு வட்டி வீதம் – வங்கி பட்டியல் வெளியீடு!
மேலும் அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 180042 52911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. ஒருசில கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்காக அரசிடம் இருந்து செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக்கொண்டு, அதைப் பொதுமக்களுக்கு வழங்காமல் தனியார் செட்டாப் பாக்ஸ்களை மக்களுக்கு கொடுத்து கூடுதல் தொகையை வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுது அடைந்தாலோ, கட்டணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ, சந்தாதாரர் குடிபெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றாலோ அல்லது வேறு நிறுவன செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தினாலோ, நீங்கள் பயன்படுத்திய அரசின் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் அடாப்டர் ஆகியவற்றை அந்த பகுதியில் உள்ள அரசு செட்டாப் பாக்ஸை வழங்கிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சந்தாதாரர் வழங்கிய செட்டாப் பாக்ஸ்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழில்நுட்பவியல் அமைச்சர் எச்சரித்துள்ளார்.