தமிழக அரசின் கல்வி டிவி அட்டவணை பெற்றோருக்கு வழங்கல் – ஆணையர் உத்தரவு!
கல்வி தொலைக்காட்சியின் பாட அட்டவணையை பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கல்வி ஆணையர் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கல்வி ஆணையரின் உத்தரவு:
கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்படும் பாடங்களின் அட்டவணையை மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
IT BPO தொழில்துறையை ஊக்கப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி தகவல்!
கல்வி டிவியில் தினமும் அனைத்து வகுப்பினருக்குமான பாடங்கள் காலை 5:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை ஒளிபரப்பப்படும். இந்த பாடங்கள் அனைத்தும் மீண்டும் இரவு 10:30 மணி முதல் காலை 5:30 மணி வரை மறுஒளிபரப்பு செய்யப்படும். இந்த அட்டவணையை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டும். இந்த விவரங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். வாட்ஸ் அப் மூலம் பெற்றோர்களுக்கு அனுப்ப வேண்டும். இணைய வசதி இல்லாத பெற்றோர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க பள்ளிக்கு வரும் பொது அட்டவணையின் நகலை கொடுக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கல்வி டிவியில் படிக்கும் பாடங்களில் சந்தேகம் ஏற்பட்டால் தீற்கும் வகையில் ஆசிரியரின் தொலைபேசி எண்ணை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பாடங்களுக்கான பயிற்சிகளை அனுப்பி மாணவர்களை செய்ய வைக்க வேண்டும். தமிழக அரசின் கல்வி டிவி அரசு கேபிள் டிவியில் 200ல் ஒளிபரப்பாகிறது. இது தவிர புதுயுகம், ராஜ் டிவி, வசந்த் டிவி, கேப்டன் நியூஸ், சத்தியம் டிவி, லோட்டஸ், மதிமுகம், மக்கள் தொலைக்காட்சி, எஸ்சிவி கல்வி ஆகிய சேனல்களிலும் ஒளிபரப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.