IT BPO தொழில்துறையை ஊக்கப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி தகவல்!

0
IT BPO தொழில்துறையை ஊக்கப்படுத்த நடவடிக்கை - பிரதமர் மோடி தகவல்!
IT BPO தொழில்துறையை ஊக்கப்படுத்த நடவடிக்கை - பிரதமர் மோடி தகவல்!
IT BPO தொழில்துறையை ஊக்கப்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி தகவல்!

தகவல் தொழில்நுட்ப துறையில் தற்போது பிரபலமாகி வரும் BPO தொழில்நுட்பத்தை மேம்படுத்த, மத்திய அரசு சில முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மோடி தகவல் அளித்துள்ளார்.

BPO தொழில்

உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் (IT) வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக IT துறையில், தற்போது பிரபலமாகி வரும் BPO தொழிமுறைகளை மேம்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக பல முக்கியமான சீர்திருத்தங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்தம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இதற்கிடையில் OSP என்னும் பிற சேவைகளை வழங்குநர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை தாராளமயமாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் உலகளவிலான BPO தொழில்களில் இந்தியா ஒரு வலுவான முறையில் நிலை நிறுத்தப்படும். மேலும் உள்நாடு மற்றும் சர்வதேச OSP களுக்கு இடையிலான வேறுபாடும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘இந்தியாவிலும் BPO தொழில்துறையை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாராளமயமாக்கப்பட்ட OSP புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இது இந்தியாவின் வர்த்தகம் மற்றும் ஒழுங்கு முறையை மேலும் எளிதாக்குகிறது. இது இணக்கச் சுமையை குறைத்து தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு உதவும்’ என்றொரு கருத்தை பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் நேற்று (ஜூன் 24) ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதனால் சிறந்த தொலைத்தொடர்பு வளங்களை கொண்டுள்ள BPO மையம், இந்தியா உள்பட பல உலக நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியும். இதன் மூலம் BPO நிறுவனங்களின் செலவுகளும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!