ஒரே நாளில் கிடு கிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
ஒரே நாளில் கிடு கிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
ஒரே நாளில் கிடு கிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
ஒரே நாளில் கிடு கிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரம் வரைக்கும் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ.114 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

தங்கத்தின் விலை சில நாட்களாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் கூட குடும்ப உறுப்பினர்களுக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசை மட்டும் குறைய போவதே இல்லை. தங்கத்தில் முதலீடு செய்வது தான் தாய்மார்களும், இல்லத்தரசிகளும் புத்திசாலித்தனமான திட்டமாக எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் இருந்து தான் கொரோனா பரவல் தாறுமாறாக உயரத் தொடங்கியது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் வரைக்கும் ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – அடுத்த கேப்டன் இவர்தான்? ஹர்பஜன் சிங் கருத்து!

உக்ரைனை உலுக்கி கொண்டிருக்கும் ரஷ்ய போராலும் தங்கத்தின் விலை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி என அனைத்துமே பாதிப்படைந்து பங்கு சந்தை நிலவரங்களும் மிகவும் சரிவடைந்துள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 38,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4719 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 63.20 ரூபாய்க்கு விற்பனையானது.

Exams Daily Mobile App Download

தற்போது ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.114 குறைந்து ரூ.37,896 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.18 குறைந்து ரூ.4,737க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.70-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!