தீபாவளி சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
தீபாவளி சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தீபாவளி சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தீபாவளி சலுகை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது. ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர் சரிவை கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்க விலை நிலவரம்:

தமிழகத்தில் உள்ள பெண்களில் நகையை விரும்பாதவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் அனைவரும் நகை விரும்பிகளாகவே உள்ளனர். தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் தங்கத்தின் விலை பெரும் சரிவை சந்தித்தது. ஆனால் விலை குறைந்திருந்த அந்த நேரத்தில் மக்கள் தங்கத்தில் ஈடுபாடு காட்டவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் அனைவரும் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்தனர். அதனால் பங்குச் சந்தையில் தங்கத்தின் முதலீடு குறைய தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு உலகம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றது. கொரோனா குறைவதை தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தீபாவளிக்கு முன்னதாக பொருட்கள் விநியோகம்!

தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்புவதால் திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்த நிலையிலேயே இருந்து வந்தது. அவ்வாறு அதிகரித்து வந்த தங்க விலை 35 மற்றும் 36 ஆயிரம் என்ற நிலையில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,528க்கும், ஒரு சவரன் ரூ.36,224க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் நேற்று சவரனுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,538க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,304க்கும் விற்பனை செய்யப்பட்டது.

TCS, Infosys, Wipro & HCL நிறுவனங்களில் பெண்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

அதனை தொடர்ந்து வெள்ளி விலையானது கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (அக்.7) நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து 1 கிராம் ரூ.4,508 க்கும், சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து ரூ.36,064க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்றிலிருந்து 80 காசுகள் குறைந்து இன்று ரூ.69.20 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.69,200 க்கும் விற்பனையாகிறது. அதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!