முதல்வர் பழனிசாமி இன்று 7 மணிக்கு உரை..!

0
முதல்வர் பழனிசாமி இன்று 7 மணிக்கு உரை..!
முதல்வர் பழனிசாமி இன்று 7 மணிக்கு உரை..!

முதல்வர் பழனிசாமி இன்று 7 மணிக்கு உரை..!

தமிழக அளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு 7 மணிக்கு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 23-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது கொரோனாவால் தமிழகத்தில் ஏற்படும் முதல் உயிரிழப்பு.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23ஆக உயர்வு..!

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘சேலத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அவர்களின் பயண வழிகாட்டிக்கும்தான் கொரானா இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 22 ஆம் தேதி முதல் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா தொடர்பாக விதிக்கப்பட்ட உத்தரவை மீறிய 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் என்றும், சீனாவிலிருந்து திரும்பி வந்த அந்த நபர் அரசின் உத்தரவுக்கு எதிராக வெளியில் சுற்றி வந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ் 

நேற்று 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு, நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இப்படிப்பட்ட முக்கியமான நேரத்தில் முதல்வர் பழனிசாமி, உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !!!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!