தமிழக கல்லூரிகளில் 75 : 25 வெயிட்டேஜ் அடிப்படையில் செமஸ்டர் தேர்வு – TANSCHE அறிவுறுத்தல்!

0
தமிழக கல்லூரிகளில் 75 : 25 வெயிட்டேஜ் அடிப்படையில் செமஸ்டர் தேர்வு - TANSCHE அறிவுறுத்தல்!
தமிழக கல்லூரிகளில் 75 : 25 வெயிட்டேஜ் அடிப்படையில் செமஸ்டர் தேர்வு - TANSCHE அறிவுறுத்தல்!
தமிழக கல்லூரிகளில் 75 : 25 வெயிட்டேஜ் அடிப்படையில் செமஸ்டர் தேர்வு – TANSCHE அறிவுறுத்தல்!

தமிழகத்தில் தற்போது கல்லூரிகளில் 50:50, 60:40 ஆகிய வெயிட்டேஜ் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 75:25 வெயிட்டேஜ் அடிப்படையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட வேண்டும் என TANSCHE அறிவுறுத்தியுள்ளது.

வெயிட்டேஜ்

தமிழகத்தில் அரசு/அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் 50:50, 60:40 என பல்வேறு வெயிட்டேஜ் முறையை பின்பற்றி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் தமிழக கல்லூரிகளில் 75 : 25 என்ற வெயிட்டேஜ் முறையில் 75 மதிப்பெண்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும், 25 மதிப்பெண்களுக்கு அகமதிப்பீடுக்கான தேர்வுகளும் நடத்தப்பட வேண்டும் என TANSCHE அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான பாடத்திட்டம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக TANSCHE உறுப்பினர் கூறியதாவது, தற்போது Tnpsc தேர்வுகளில் தமிழ் மொழித்தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் BCom, BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் 4வது செமஸ்டர் வரை தமிழ் மொழிப்பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஏர் இந்தியாவின் விருப்ப ஓய்வு திட்டம் – இரண்டாவது விஆர்எஸ் பெறும் 2100 ஊழியர்கள்!

அதன்படி BCom, BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் 2வது செமஸ்டர் வரை இருந்த தமிழ் மொழிப்பாடத்தை, தற்போது 4வது செமஸ்டர் வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில், புவியியல், சுற்றுலா, பயண மேலாண்மை, தொல்லியல் படிப்புகள், வரலாறு உள்ளிட்ட பாடப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!