தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் தொடக்கம் – ஆசிரியர்களுக்கான வழிமுறைகள் வெளியீடு!

0
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் தொடக்கம் - ஆசிரியர்களுக்கான வழிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் தொடக்கம் - ஆசிரியர்களுக்கான வழிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் தொடக்கம் – ஆசிரியர்களுக்கான வழிமுறைகள் வெளியீடு!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13 ஆம் தேதி தொடங்கப்பட இருக்கும் நிலையில், அரசு & அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு TNSED Attendance App-இல் Attendance பதிவு செய்வதற்கான வழிமுறைகள் வெளியாகி இருக்கிறது

பொதுத்தேர்வு

தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். மேலும் இந்த ஆண்டு மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களாக ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் தேர்விற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நாளை (மார்ச் 11) முழு அடைப்பு போராட்டம் – பேருந்துகள் இயங்குமா? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

இந்நிலையில் திங்கள் கிழமை முதல் அரசு பொது தேர்வுகள் தொடங்க இருப்பதால் ஆசிரியர்கள் TNSED Attendance App-இல் Attendance பதிவிட சில வழிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Attendance பதிவிட, Partially Working என்ற Option-னை Select செய்து எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ அதை மட்டும் Select செய்ய வேண்டும். மேலும் Reason என்பதில் exam என கொடுக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அதே போல ஆசிரியர்களுக்கு Attendance பதிவிட, தேர்வு பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு FN & AN Attendance-இல் OD என பதிவிட வேண்டும். மேலும் Exam Centre வேலை செய்யும் பள்ளியாக இருந்தால் காலை பள்ளி நடைபெறாமல் மதியம் மட்டும் பள்ளி நடைபெறும் அப்போது தேர்வு பணியில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு FN Attendance-இல் NA என்றும், AN Attendance-இல் வழக்கம்போல் Present or Absent என பதிவிட வேண்டும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!