TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுகளில் ஒன்றான குரூப் 2,2A தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் குரூப் 2 தேர்வின் பாடத்திட்டம் குறித்த விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

குரூப் 2,2A பாடத்திட்டம்:

தமிழகத்தில் அரசுத்துறை பணியிட தேர்வான குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடப்பாண்டு குரூப் 2 தேர்வின் கீழ் உள்ள 5529 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த குரூப் 2 தேர்வு தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை பூர்த்தி செய்ய நடத்தப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு குரூப் 2 தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 23ம் தேதி முதல் தொடங்கியது.

10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சியா, மத்திய அரசில் வேலைவாய்ப்பு – பிப்ரவரி 28 கடைசி நாள்!

இந்த குரூப் 2 தேர்வானது முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு என்று இரண்டு கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்யப்படுவர். தேர்வை எழுத விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதியாக தட்டச்சு தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் குறிப்பிட்ட சில பதவிகளுக்கு அந்தத் துறை சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொது பிரிவில் 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் தேர்வை எழுதலாம். பிற பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு.

குரூப் 2,2A பாடத்திட்டம்:
  • முதல்நிலைத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவில் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடத்தில் இருந்து 100 வினாக்களும், இரண்டாம் பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள் இடம்பெறும்.
  • முதல்நிலைத் தேர்வில் பொது ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் இடம் பெறும் இந்த பிரிவு பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும்.
  • முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் பிரிவில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு கிய பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
  • முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!