10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சியா, மத்திய அரசில் வேலைவாய்ப்பு – பிப்ரவரி 28 கடைசி நாள்!

0
10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சியா, மத்திய அரசில் வேலைவாய்ப்பு - பிப்ரவரி 28 கடைசி நாள்!
10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சியா, மத்திய அரசில் வேலைவாய்ப்பு - பிப்ரவரி 28 கடைசி நாள்!
10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சியா, மத்திய அரசில் வேலைவாய்ப்பு – பிப்ரவரி 28 கடைசி நாள்!

அலுவலக உதவியாளர், சேல்ஸ்மேன், சூப்பர்வைசர், அக்கவுன்டன்ட் மற்றும் கிளை மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாளே (பிப்ரவரி 28) கடைசி தேதி என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசு வேலை:

மத்திய அரசின் சிம்கோ நிறுவனம் (South India Multi-State Agriculture Co-Operative Society Limited (SIMCO)) அலுவலக உதவியாளர், சேல்ஸ்மேன், சூப்பர்வைசர், அக்கவுன்டன்ட் மற்றும் கிளை மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான 48 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை மறுதினமே (பிப்ரவரி 28) கடைசி நாள். ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு காலியிடங்கள், சம்பளம், வயது வரம்பு என்பது குறித்தான அனைத்து தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

உக்ரைன், ரஷ்யா இடையே தொடரும் போர் பதற்றம் – 3500 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு!

அதாவது அலுவலக உதவியாளர் பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10, 12 அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிந்தால் போதும். மாத சம்பளம் ரூ.5,200 முதல் 20,200 வரை வழங்கப்படுகிறது. சேல்ஸ்மேன் வேலைக்கு 22 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10, 12 அல்லது ஐடிஐ அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.6,200 முதல் 26,200 வரை வழங்கப்படுகிறது. சூப்பர்வைசர் பணிக்கு 8 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.6,200 முதல் 28,200 வரை வழங்கப்படுகிறது. மேலும் அக்கவுன்டன்ட் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு யுஜி அல்லது பிஜி டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.7,200 முதல் 30,200 வரை வழங்கப்படுகிறது. கிளை மேலாளர் வேலைக்கு 4 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு பி.ஜி. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.7,200 முதல் 30,200 வரை வழங்கப்படுகிறது.

மார்ச் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு 21 முதல் 35 வயதாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களது விண்ணப்பங்களை South India Multi-State Agriculture Co-Operative Society Limited, Head Office, Town Hall Campus, Near Old Bus Stand, Vellore – 632004 என்கிற அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!