அதிரடியாக 400 ஊழியர்களை பணி நீக்கிய பிரபல நிறுவனம் – ஷாக் அறிக்கை!

0
அதிரடியாக 400 ஊழியர்களை பணி நீக்கிய பிரபல நிறுவனம் - ஷாக் அறிக்கை!

பல்வேறு காரணங்களினால் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது பரவலாக நடந்து வரும் நிலையில் பிரபல நிறுவனத்தில் இருந்து அதிரடியாக 400 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி நீக்கம்:

உலகம் முழுவதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலை காரணமாக சிறிய நிறுவனங்கள் முதல் உலகின் பிரபலமான நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பிலும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிறுவனங்களின் சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி நிறுவனம் அதிரடியாக தனது 400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்நிறுவனத்தில் இருந்து 380 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, நிர்வாகம் போன்ற பிரிவுகளில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!