பெண் குழந்தைகளுக்கான சூப்பரான தபால் துறை திட்டம் – முழு விவரம் இதோ!

0
பெண் குழந்தைகளுக்கான சூப்பரான தபால் துறை திட்டம் - முழு விவரம் இதோ!
பெண் குழந்தைகளுக்கான சூப்பரான தபால் துறை திட்டம் - முழு விவரம் இதோ!
பெண் குழந்தைகளுக்கான சூப்பரான தபால் துறை திட்டம் – முழு விவரம் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல நல்ல சேமிப்பு திட்டங்கள் உள்ள நிலையில் பெண் குழந்தைகளின் நலனிற்காக தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற செல்ல மகள் சேமிப்பு திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

சேமிப்பு திட்டம்:

மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சரியான இடத்தில் முதலீடு செய்வது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்திய தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வங்கியில் பெண் குழந்தைகளின் நலனிற்காக தொடங்கப்பட்டது தான் சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற செல்ல மகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தொடங்கலாம்.

தமிழக ரேஷன் கடைகளுக்கு நியூ அப்டேட் – இதை மட்டும் செய்யுங்க!

மேலும் இந்த திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு பிரிவு 80 சி யின் படி வரி விலக்கு அளிக்கப்படுவதால் அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஏதுவான திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை பெற்றோர்கள் 2 குழந்தைகளுக்கு என இரண்டு திட்டம் தொடங்கலாம். ஒரு வேளை இரட்டை குழந்தைகள் பிறந்த பின் 3வது குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கும் கணக்கு தொடங்கலாம். இதற்கு குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகும். மேலும் செலுத்தக்கூடிய சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளில் நிறைவு பெறும். ஆனால் கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் வரை மட்டும் தான் சேமிப்புத் தொகையைச் செலுத்த முடியும்.

இந்த திட்டத்தில் செலுத்தும் தொகை காசோலை, வரைவோலை மற்றும் நேரடியாக பணத்தை டெபாசிட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்தலாம். ஒருவேளை பணத்தைச் சரியாகக் கட்டத் தவறும் பட்சத்தில் டெபாசிட்டுடன் ஆண்டுக்கு ரூபாய் 50 அபராதம் செலுத்தினால் தான் கணக்கைப் புதுப்பிக்க முடியும். இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கணக்கின் படி வட்டியில் மாற்றம் வரும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!