சென்னைவாசிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – இனி சான்றிதழ்களை பெற ஆன்லைன் சேவைகள்!

0
சென்னைவாசிகளுக்கான சூப்பர் அறிவிப்பு - இனி சான்றிதழ்களை பெற ஆன்லைன் சேவைகள்!
சென்னைவாசிகளுக்கான சூப்பர் அறிவிப்பு - இனி சான்றிதழ்களை பெற ஆன்லைன் சேவைகள்!

சென்னைவாசிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – இனி சான்றிதழ்களை பெற ஆன்லைன் சேவைகள்!

தமிழகத்தில் சென்னை மாநகராட்சி குடிமக்களுக்கு RTI சட்டத்தின் கீழ் எளிதாக அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான புதிய ஆன்லைன் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட சில சேவைகள் மாநகராட்சியால் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சேவைகள்:

தமிழகத்தில் தற்போது அரசு சார்ந்த வேலைகளும் ஆன்லைன் மையமாகி விட்டது. குறிப்பாக அரசு போட்டி தேர்வுகளுக்கு பதிவு செய்ய பிறப்பு , இறப்பை பதிவு செய்தல் சமூகக் கூடங்கள் முன்பதிவு செய்தல் போன்ற பணிகள் ஆன்லைன் முலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் RTI சட்டத்தின் கீழ் ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் குடிமக்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைனில் வழங்கக்கூடிய சுமார் 16 சேவைகள் முதல் கட்டமாக வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் சேவை குறித்த பட்டியல் ஜி.சி.சி அலுவலகங்களின் முன் ஒரு பலகையில் காட்டப்பட வேண்டும் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். இதில், நிர்ணயிக்கப்பட்ட நேரம், தகுதிக்கான அளவுகோல், கட்டணத் தொகை, விண்ணப்பங்களின் நடைமுறை, விண்ணப்பத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை மற்றும் எந்த ஒரு சேவைக்கும் ஒப்புதல் பெற எதிர்பார்க்கப்படும் நேரம், மற்றும் அதிகாரிகளால் தாமதம் ஏற்பட்டால், தாமதத்திற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று வேளச்சேரி மேற்கு செயலாளர் அறிவுரை வழங்கி உள்ளார்.

மேலும் தற்போதுள்ள ஆன்லைன் பிறப்புச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ் சேவைகளை ஆதார்போன்ற இணையதளங்களுடன் மாநகராட்சி ஒருங்கிணைத்து உள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட சில சேவைகள் மாநகராட்சியால் இலவசமாக வழங்கப்படுகிறது. சென்னையில் 2020-2021 ஆம் ஆண்டில் மொத்தம் 53,381 வர்த்தக உரிம சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து சென்னையில் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 53,381 வர்த்தக உரிமங்கள் ஆன்லைன் வழங்கப்பட்டுள்ளன. 2020-2021 ல் கட்டிட ஒப்புதலுக்கான குறைந்தபட்சம் 12,803 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!