சன் டிவி “சுந்தரி” சீரியல் கேப்ரியல்லாவிற்கு திருமணம் முடிந்துவிட்டதா? இவர் தான் கணவரா? வைரலாகும் புகைப்படம்!

0
சன் டிவி
சன் டிவி "சுந்தரி" சீரியல் கேப்ரியல்லாவிற்கு திருமணம் முடிந்துவிட்டதா? இவர் தான் கணவரா? வைரலாகும் புகைப்படம்!
சன் டிவி “சுந்தரி” சீரியல் கேப்ரியல்லாவிற்கு திருமணம் முடிந்துவிட்டதா? இவர் தான் கணவரா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல் வரிசையில் இருக்கும் “சுந்தரி” சீரியலில் நாயகியாக நடித்து வரும் நடிகை கேப்ரியல்லாவின் கணவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அவரது கணவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சுந்தரி சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் தற்போது பிரபலமாக இருக்கும் பலர் டிக்டாக் செயலி மூலமாக தங்களுடைய திறமையை காட்டியவர்கள் தான். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா சீரியலில் நடித்து வரும் ஆயிஷா, விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சக்தி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிஷா மற்றும் சன் டிவி சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரியல்லா ஆகியோர் டிக்டாக் மூலம் பிரபலமாகி பின் சின்னத்திரைக்கு வந்தவர்கள் தான்.

பிரசவ அறையில் காஜல் அகர்வால் அனுபவித்த திக் திக் நிமிடங்கள் – அவரே வெளியிட்ட பதிவு!

கேப்ரியல்லா தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்து இருக்கிறார். ஆனால் அங்கே எல்லாம் அவரது நிறத்தை காரணம் காட்டி நிராகரித்து உள்ளனர். ஆனால் அவர் சோதனைகளை எல்லாம் சாதனையாக மாற்றி தற்போது முன்னணி சீரியல் கதாநாயகியாக ஜொலித்து வருகிறார். அவர் இதற்கு முன்னதாக விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை காட்டி இருக்கிறார்.

ExamsDaily Mobile App Download

தற்போது அவர் நடித்து வரும் சுந்தரி சீரியல் டாப் சீரியல் வரிசையில் ஒன்றாக இருக்கிறது. டாப் சீரியல் கதாநாயகியாக கேப்ரியல்லா தன்னுடைய திறமை ஒன்றை மட்டுமே வைத்து முன்னேறி இருக்கிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அவருடைய கணவருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடைய நண்பரையே அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here