விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி “சுந்தரி” சீரியல்.. சீசன் 2ல் இந்த நடிகரா? – வெளியான அப்டேட்!
சன் டிவி “சுந்தரி” சீரியலில் அனுவிற்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது. சுந்தரியும் கலெக்டர் ஆகிவிட்டார். இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய இருப்பதாகவும், சீசன் 2 தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சுந்தரி சீரியல்:
சின்னத்திரையில் டாப் சீரியல்களின் ஒன்றான சுந்தரி சீரியலில், பரபரப்பான திருப்பங்கள் நடந்து முடிந்துள்ளது. அனுவிற்கு சுந்தரி கார்த்தி இடையே இருக்கும் உறவு குறித்து தெரிய வந்துள்ளது. அதனால் முதலில் பிரிந்து இருந்தாலும், சுந்தரியின் நல்ல குணம் தெரிந்து அவர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து இருக்கிறார். இந்நிலையில் சுந்தரி நினைத்தபடி கலெக்டர் ஆகி விட்டார்.
தமிழகத்தில் நாளை (செப் .01) இந்த இடங்களில் மின்தடை ஏற்படும் – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
இப்படி எல்லா திருப்பங்களும் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் சுந்தரி சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும், சீசன் 2 விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சுந்தரி சீசன் 2வில் தெய்வமகள் சீரியல் புகழ் நடிகர் கிருஷ்ணா, சுந்தரிக்கு ஜோடியாக களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.