சன் டிவி சுந்தரி சீரியலுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை – ரசிகர்கள் வாழ்த்து!

0
சன் டிவி சுந்தரி சீரியலுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி சுந்தரி சீரியலுக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை – ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சுந்தரி” சீரியலில் புதுமுகமாக அறிமுகமாகி தற்போது பிரபலமான சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறார் கேப்ரியல்லா.

சுந்தரி சீரியல்:

சினிமாவை போலவே சீரியல் பார்க்க பல ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் தான் சினிமாவில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த பலர் சீரியல்களில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்களை விட புதுமுக நடிகைகள் பிரபலமாகி இருக்கின்றனர். டாப் சீரியல் வரிசையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்கள் தான் போட்டி போடும். வழக்கமாக சன் டிவி ரோஜா சீரியலும் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலும் தான் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய ஷாரிக் & சினேகன் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு சன் டிவி “சுந்தரி” சீரியல் முதலிடம் பிடித்துள்ளது. broadcast audience research council எனப்படும் Barc கவுன்சில் வெளியிடும் வாராந்திர TRP ரேட்டிங் பட்டியலில் ஒன்று விஜய் டிவி-யின் சீரியல் முதலிடத்தில் இருக்கும். இல்லை என்றால் சன் டிவி சீரியல் இருக்கும். TRP ரேட்டிங் ஒரு புறம் இருந்தாலும் பல நிறுவனங்களும் சீரியல் மற்றும் அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த கருத்து கணிப்புகளை வெளியிடும்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ அமிர்தா ரித்திகாவின் புதிய அவதாரம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் Ormax என்ற நிறுவனம் மக்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்த பட்டியலை கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வருகிறது. Ormax Characters India Loves (Tamil) என்ற தலைப்பில் ஜனவரி 2022-ல் மிகவும் பிரபலமான புனைகதை பாத்திரங்களை (Most popular Fiction Characters) பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் முதலிடத்தில் சன் டிவி சுந்தரி சீரியலில் கதாநாயகி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியலின் கண்ணம்மா கேரக்டர், மூன்றாம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலின் ரோஜா கேரக்டர், நான்காம் இடத்தில் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலின் பாக்கியா கேரக்டர், ஐந்தாம் இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலின் கயல் கேரக்டர் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!