விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ அமிர்தா ரித்திகாவின் புதிய அவதாரம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' அமிர்தா ரித்திகாவின் புதிய அவதாரம் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' அமிர்தா ரித்திகாவின் புதிய அவதாரம் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ அமிர்தா ரித்திகாவின் புதிய அவதாரம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரித்திகா, தற்போது அம்மன் அவதாரத்தில் கலர்ஸ் தமிழ் சீரியல் ஒன்றில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ரித்திகா

கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் வினோதினி என்ற சப்போர்டிங் கதாப்பாத்திரம் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா. இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்புகளை தொடர்ந்து தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ என்ற ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களின் பேவரைட் ஆக மாறி இருக்கிறார். இந்த ஷோவில் பாலாவை கலாய்ப்பது, சமைப்பது என உற்சாகமாக காணப்படும் ரித்திகா ஒரு பாடகரும் கூட.

“பிக் பாஸ்” வீட்டில் நடந்த வனிதா vs தாமரை சண்டை – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

இப்படி பன்முகத்திறமை கொண்ட இவர் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ரித்திகா, அம்மன் அவதாரத்தில் இருக்கும் ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த தோற்றம் எதற்காக என்று வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வரும் நிலையில், ரித்திகா கலர்ஸ் டிவியின் ‘அம்மன் 2’ என்ற சீரியலில் அம்மனாக கெஸ்ட் அப்பீயரன்ஸ் கொடுத்திருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

சன் டிவியின் “தெய்வமகள் 2” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அதாவது கலர்ஸ் டிவியில் நடிகர் அமல்ஜித் மற்றும் பவித்ரா நடிப்பில் 2வது சீசனாக ஒளிபரப்பாகி வரும் ‘அம்மன்’ சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலின் கிளைமேக்ஸ் எபிசோடில் கதாநாயகி சக்தி, யாமினியை கொல்வதற்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ள அம்மன் வந்து சக்திக்கு உதவுவது போல சில காட்சிகள் இடம்பிடித்துள்ளது. இந்த காட்சியில் அம்மனாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரித்திகா. அந்த வகையில் ‘அம்மன்’ சீரியலில் ரித்திகாவின் நடிப்பு மீண்டும் பேசப்படுவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!