பல ஆண்டுகளுக்கு பின் சன் டிவி “இனியா” சீரியலில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடி – வைரல் அப்டேட்!

0
பல ஆண்டுகளுக்கு பின் சன் டிவி
பல ஆண்டுகளுக்கு பின் சன் டிவி "இனியா" சீரியலில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடி - வைரல் அப்டேட்!
பல ஆண்டுகளுக்கு பின் சன் டிவி “இனியா” சீரியலில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடி – வைரல் அப்டேட்!

சன் டிவியில் ப்ரைம் டைமில் புதிதாக நடிகை ஆலியா மானசா நடித்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “இனியா”. இந்நிலையில் இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரும் ஆலியாவும் இணைந்து எடுத்த ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

சஞ்சீவ் ஆலியா:

சின்னத்திரையில் TRP பட்டியலில் தொடர்ந்து சன் டிவி சீரியல்கள் தான் முன்னணி இடம் பிடிக்கின்றன. அதற்கு தகுந்தாற் போல சுவாரசியமான கதைக்களத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சில நாட்களுக்கு முன் சன் டிவியில் இரவு 9 மணிக்கு புதிதாக இனியா சீரியல் தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகர் இன்னும் சீரியலில் காட்டப்படவில்லை.

“பாக்கியலட்சுமி” சீரியலில் விலகியுள்ள முக்கிய கதாபாத்திரம் – காரணமா இதுவா? ரசிகர்கள் கவலை!

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் இனியா சீரியலில் நடிகர் சஞ்சீவ் சிறப்பு ரோலில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் அவர் ஆலியாவிற்கு ஜோடி இல்லை என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் சஞ்சீவ் ஆலியா சேர்ந்து நடித்த காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சஞ்சீவ் ஆலியா வெளியிட்ட வீடியோவும் வெளியாகி இருக்கிறது. மேலும் சஞ்சீவ், இனியா சீரியலில் என்ன ரோலில் நடிப்பார் என பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!