சன் டிவி சீரியல் சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

1
சன் டிவி சீரியல் சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக செய்த சாதனை - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி சீரியல் சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக செய்த சாதனை - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி சீரியல் சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் மொழியின் சின்னத்திரை தொடர்களில் இதுவரை எந்த ஒரு சீரியலும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை சன் டிவியின் சந்திரலேகா தொடர் எட்டியுள்ளது.

சாதனை தொடர்:

வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர், நடிகையர் தான் தற்போது மக்களிடத்தில் அதிகமாக புகழப்படுகின்றனர். காரணம் வெள்ளித்திரை நடிகர்கள் என்றால் எப்போதாவது தான் அவர்களை திரையில் பார்க்க முடியும். ஆனால் சின்னத்திரை நடிகர்கள் தொலைக்காட்சியின் மூலம் தினமும் மக்களை சென்று அடைகின்றனர். பல உச்சகட்ட பிரபலங்கள் கூட இதனால் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர். சின்னத்திரையில் நடித்து வரும் பலரும் வெள்ளித்திரையில் அறிமுகமானவர்கள் தான்.

இணையத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின் ஸ்டில்ஸ் – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள்!

இந்நிலையில், தமிழ் சீரியல் உலகத்திற்கு முன்னோடியான சன் டிவியில் சீரியல் ஒன்று ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை சன் டிவியில் ஒளிப்பரப்பாகிய பல தொடர்களும் காலம் கடந்தும் மக்களின் மனதில் நிற்கின்றது. சன் டிவியில் கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கிய தொடரான சந்திரலேகா 7 வருடங்களை நிறைவு செய்துள்ளது. சரியாக 7-ஆம் ஆண்டை நிறைவு செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பு தமிழ் சின்னத்திரை வரலாற்றில் இதுவரை எந்த சீரியலும் செய்யாத மிகப்பெரிய சாதனையை சந்திரலேகா செய்துள்ளது.

விஜே பிரியங்காவை கலாய்த்து பார்முக்கு வந்த ‘பிக்பாஸ்’ – வெளியான ப்ரோமோ!

சந்திரலேகா தொடரின் 2000வது எபிசோட் அக்டோபர் 5ம் தேதியான நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழ் சீரியல்களில் அதிக எபிசோட்களை கடந்த வெற்றிகரமான சீரியல் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த வள்ளி தொடரை பின்னுக்கு தள்ளி சந்திரலேகா முதலிடத்தை பிடித்துள்ளது. மக்கள் விரும்பும்படியான கதைக்களத்துடன் வெற்றிகரமாக 2000 எபிசோட்களை கடந்து சந்திரலேகா பெரும் சாதனை படைத்துள்ளது. இதனால் இந்த தொடரின் நடிகர், நடிகையர் தங்களின் மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!