‘சன் டிவி’ சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

2
'சன் டிவி' சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
'சன் டிவி' சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
‘சன் டிவி’ சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து சீரியல்களிலும் லீட் ரோலில் நடித்து வரும் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த விவரங்கள் இப்பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அபியும் நானும் சீரியல் நடிகை முதலிடத்தை பிடித்துள்ளார்.

சீரியல் நடிகைகள்

தற்போதெல்லாம் சினிமா நட்சத்திரங்களை போலவே சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதே நேரத்தில் இந்த புகழ், பெருமையை தாண்டியும் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு ஒரு கணிசமான தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. பொதுவாக ஒரு மாதத்தில் சீரியல் படப்பிடிப்பு 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை நடத்தப்படுவது உண்டு. இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் நாள் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – இயக்குனரை கலாய்க்கும் ரசிகர்கள்!

அதிலும் டெலிகாஸ்ட் தரவுகளில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் சில டிவி சேனல்களின் பிரபலங்களுக்கு சற்று கூடுதலாகவே இந்த சம்பளத் தொகை வழங்கப்படும். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்படும் அனைத்து சீரியல்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வரும் நடிகைகளின் சம்பள விவரங்கள் குறித்த பட்டியல் தற்போது கிடைத்துள்ளது. அதன் கீழ், சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மகராசி சீரியல் நடிகை ஸ்ருத்திகா ஸ்ரீயின் ஒரு நாள் சம்பளம் ரூ.9,000 ஆகும்.

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ ஷோவில் திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்ட நடிகை பாவனி ரெட்டி – வெளியான ப்ரோமோ!

அதே போல பாண்டவர் இல்லம் சீரியலின் கதாநாயகி பாப்ரி கோஷி வாங்கும் ஒரு நாள் சம்பளம் ரூ.7,000. தொடந்து அன்பே வா சீரியலின் கதாநாயகி டெல்னா டேவிஸ் சம்பளம் ரூ.8,000, சித்தி 2 சீரியலின் கதாநாயகி ப்ரீத்தி சர்மா சம்பளம் ரூ.7,000, அபியும் நானும் சீரியலின் கதாநாயகி வித்யா ஒரு நாள் சம்பளம் ரூ.11,000, சந்திரலேகா சீரியலின் கதாநாயகி ஸ்வேதா ஒரு நாள் சம்பளம் ரூ.8,500, அதே சீரியலில் நடித்து வரும் நாது ஸ்ரீ சம்பளம் ரூ.6,000, திருமகள் சீரியலின் கதாநாயகி ஹரிகா சம்பளம் ரூ.7,000 ஆகும்.

மேலும், தாலாட்டு சீரியலின் கதாநாயகி ஸ்ருதி ஒரு நாள் சம்பளம் ரூ.10,000, வானத்தை போல சீரியலின் தங்கை வேடத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா சம்பளம் ரூ.6,000, பூவே உனக்காக சீரியலின் கதாநாயகி ராதிகா ப்ரீத்தி சம்பளம் ரூ.8,000, ரோஜா சீரியலின் கதாநாயகி ப்ரியங்கா நல்காரி ஒரு நாள் சம்பளம் ரூ.10,000, சுந்தரி சீரியலின் கதாநாயகி கேப்ரியல்லா ஒரு நாள் சம்பளம் ரூ.8,000, கண்ணான கண்ணே சீரியலின் கதாநாயகி நிமிஷிகா ஒரு நாள் சம்பளம் ரூ.7,500 ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!