Tokyo Paralympics 2020 ஈட்டி எறிதல் – தங்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் ஆன்டில்!
ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த வீரர் சுமித் ஆன்டில் தற்போது தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தங்க பதக்கம்
டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் போட்டிகளத்தில் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வரும் இந்திய வீரர்கள், போட்டிகள் துவங்கிய 6 ஆவது நாளான நேற்று (ஆகஸ்ட் 29) இந்தியாவுக்கு 3 பதக்கங்களை பெற்று தந்துள்ளனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 30) 7 ஆவது நாளில் துவங்கியுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? போராட முடிவு!
அந்த வகையில் ஈட்டி எறிதல் பிரிவில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த வீரர் சுமித் ஆன்டில் என்பவர் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் F 64 பிரிவில் சுமார் 68.55 மீட்டர் தூரம் வரை தனது ஈட்டியை எரிந்து இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப்பதக்கத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிகழ்வை தொடர்ந்து வீரருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
மேலும் இவரது வெற்றியை கொண்டாடும் விதத்தில் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனுடன் நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் வீராங்கனை பவினா பட்டேல் வெள்ளி பதக்கமும், நிஷாட் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் பெற்று சாதனை படைத்திருந்தனர். ஆனால் வட்டு எறிதல் வீரர் வினோத் பெற்ற வெண்கல பதக்கம் சில காரணங்களால் போட்டி நடத்தும் குழுவினரால் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.