கரும்பின்  கொள்முதல் விலை உயர்வு? மாநில அரசின் அதிரடி அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்!

0
கரும்பின்  கொள்முதல் விலை உயர்வு? மாநில அரசின் அதிரடி அறிவிப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்!

உத்திரபிரதேசத்தில் தற்போது கரும்பின் கொள்முதல் விலையை மாநில அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் வாயிலாக 45 லட்சம் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன் பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

கரும்பு விலை:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு கரும்பின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.315 ஆக இருந்து வந்தது. கரும்பின் விலை சரிவால் கரும்பு சாகுபடி குறைந்த நிலையில் சர்க்கரை ஆலைகளை மூடும் நிலைக்கு ஆளானது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது கரும்புக்கான SAP விலையை குவிண்டாலுக்கு ரூ. 25 ஆக உயர்த்தி அரசு அறிவித்தது. இதனையடுத்து ஆரம்ப ரக கரும்பு கொள்முதல் விலை குவிண்டால் ரூபாய் 350 ஆகவும் சாதாரண கரும்பு குவிண்டால் ரூ. 40 ஆகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில் மீண்டும் கரும்பு கொள்முதல் விலையை உத்தரப்பிரதேச அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. தற்போது  கொள்முதல் விலை ரூ.20 உயர்த்தி அறிவித்துள்ளதையடுத்து ஆரம்ப ரக கரும்பு விலை குவிண்டாலுக்கு ரூ. 370 ஆகவும் பொதுவான ரக கருப்பு விலை ரூ.360 ஆகவும் இருக்கும் என சர்க்கரை தொழில் மற்றும் கரும்பு மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!