தமிழகத்தில் வியாழக்கிழமை விடுமுறை – நிறுவனங்களுக்கு பெரிய எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் வியாழக்கிழமை விடுமுறை - நிறுவனங்களுக்கு பெரிய எச்சரிக்கை!!
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும்  நடவடிக்கை:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் பணிபுரியும் தினக்கூலி, தற்கால பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தேர்தல் அன்று வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இ மேலும் இதுகுறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார் தெரிவிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் தற்போது புகார் எண்களை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!