ஆன்லைன் மூலம் விதவை சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

0
ஆன்லைன் மூலம் விதவை சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
ஆன்லைன் மூலம் விதவை சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
ஆன்லைன் மூலம் விதவை சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

தமிழகத்தில் உள்ள கணவரை இழந்த பெண்கள் ஆன்லைன் மூலமாக விதவை சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த முழு விவரம் வழங்கப்பட்டுள்ளது.

விதவை சான்றிதழ்:

தமிழகத்தில் முன்னதாக ஜாதி, வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவை பெற அரசு அலுவலங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். மக்கள் தங்களது வேலைகளை விட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து அரசு சேவைகளும் டிஜிட்டல் மையமாக மாறி வரும் நிலையில் இந்த சான்றிதழ்கள் பெற ஆன்லைன் மூலம் எளிய வழிமுறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நடப்பு நிதியாண்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – UST அறிவிப்பு!

விதவை சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம், இருப்பிடச் சான்றிதழ், திருமணப் பதிவு சான்று, கணவன் இறப்புச் சான்று ஆகியவை தேவை ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:
  • முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் ஆப்சன் மூலம் நுழைய வேண்டும்.
  • லாகின் செய்த பின்னர் Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர் Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் உங்களுக்கான CAN எண்ணை உருவாக்க வேண்டும். இதனை ரிஜிஸ்டர் செய்யும்போது உங்களின் விவரங்களை நன்கு படித்து பின்னர் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். அப்போது உங்களுக்கான எண் உருவாக்கப்படும்.
  • பின்னர் List of Documents பகுதியில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இதை அடுத்து Self Declaration Form வரும். அதனை பதிவிறக்கம் செய்து, பின்னர் ஒப்பிட்டு மீண்டும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
  • அதன் பின்னர் சான்றிதழுக்கான ரூ.60 விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். உங்களது ஆவணங்கள் அதிகாரிகளால் சரிப்பார்க்கப்பட்ட பின்னர் உங்களது தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும்.
  • இதே இணையதளத்தில், தற்போது உருவாக்கப்பட்ட லாகின் ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைவதன் மூலம் உங்களது சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!