மூன்று மாதத்திற்குள் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 – தமிழக அரசு உறுதி!
தமிழகத்தில் திருநங்கைகளுக்கு மூன்று மாதத்திற்குள் கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4000 வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருநங்கைகளுக்கு நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான ஏழை, எளிய மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை இழந்து உணவின்றி வீட்டு செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனை உணர்ந்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு 2 தவணைகளாக நிவாரண நிதி வழங்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் விதவை சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
மேலும் 14 வகை பொருட்கள் அடங்கிய இலவச மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கார்டுகள் இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கவில்லை. இதனை கண்டித்து மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கொரோனா ஊரடங்கால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல தான் திருநங்கைகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பெரும்பாலான திருநங்கைகளிடம் ரேஷன் அட்டைகள் இல்லை அதனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டார்.
TN Job “FB
Group” Join Now
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணை 2000 ரூபாய் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. 2ம் தவணை 2000 ரூபாய் விரைவில் வழங்கப்படும். மேலும் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், மூன்று மாதத்திற்குள் கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குள் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.