நடப்பு நிதியாண்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – UST அறிவிப்பு!

0
நடப்பு நிதியாண்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - UST அறிவிப்பு!
நடப்பு நிதியாண்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - UST அறிவிப்பு!
நடப்பு நிதியாண்டில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – UST அறிவிப்பு!

UST, டிஜிட்டல் உருமாற்ற தீர்வுகள் நிறுவனம் (digital transformation solutions firm) தற்பொழுது துவங்கியுள்ள நிதியாண்டில், உலகம் முழுவதும் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய பணியமர்தல்

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்ட UST நிறுவனம் டிஜிட்டல் மாற்றம், சைபர் பாதுகாப்பு, கிளவுட் உள்கட்டமைப்பு, ஜாவா, தரவு அறிவியல் மற்றும் பொறியியல், பயன்பாட்டு மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், AI/ML, ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன் மற்றும் அறிவார்ந்த செயல்முறை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை உலகளவில் நியமிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கை 10 நாட்கள் நீட்டிப்பு? இயக்குனர் கடிதம்!

இந்த புதிய பணியமர்த்தலில் 2,000 புதிய பொறியியல் பட்டதாரிகள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UST யில் புதிதாக பணியமர்த்தப்பட உள்ள ஊழியர்கள் 100 மணி நேர திறமை நிகழ்வுகளில் உட்படுத்தப்பட உள்ளனர். இந்த உலகளவு பணியமர்த்தல் இந்தியா, இஸ்ரேல், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா, கோஸ்டாரிகா, சிலி, பெரு, அர்ஜென்டினா, கொலம்பியா, இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளில் இருந்து ஏற்படுத்தப்பட உள்ளது.

தவிர ஜெர்மனி, பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, போலந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளிலும் புதிய பணியமர்தல் நடைபெற இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடன் அதன் வணிகங்களை மாற்ற தொழில்நுட்ப வல்லுநர்களையும், ஆக்கப்பூர்வ சிந்தனையாளர்களையும் சேர்க்க விரும்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே தற்போது 25 நாடுகளில் 26,000 க்கும் அதிகமான ஊழியர்களை UST நிறுவனம் கொண்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் 15,000 பேர் திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சி, சென்னை, ஹைதராபாத், புனே, நொய்டா, ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் அகமதாபாத்தில் உள்ள இந்திய அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். புதிய பணியமர்தல் தொடர்பாக UST யின் கூட்டு தலைமை இயக்க அதிகாரி மனு கோபிநாத் கூறுகையில், ‘புதிய பணியாளர்கள் தொழிலின் முன்னணி தயாரிப்புகள் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை ஆதரிப்பார்கள். அவை எங்கள் தீர்வுகளுக்கான தேவையை அளிக்கும். தற்போது இந்நிறுவனம் வளர்ச்சியின் அற்புதமான கட்டத்தில் உள்ளது’ என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!