WhatsApp Status டவுன்லோடு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
WhatsApp Status டவுன்லோடு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp Status டவுன்லோடு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp Status டவுன்லோடு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

WhatsApp செயலியில் வரும் ஸ்டேட்டஸ்களை டவுன்லோடு செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எளிமையாக வீடியோக்களை டவுன்லோட் செய்யும் முறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் டவுன்லோடு:

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் செயலியில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இது பயன்படுத்துவதற்கும் எளிமையாக அமைந்து விடுகிறது. தனிப்பட்ட தொலைத்தொடர்புக்கும் வணிக ரீதியான தொடர்புக்கு வாட்ஸ்அப் செயலி பயனுள்ளதாக உள்ளது. வாட்ஸ் அப்பில் முக்கிய அம்சமாக இருப்பது ஸ்டேட்டஸ் தான். வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த பாடல்கள், வீடியோக்களை ஸ்டேட்டஸாக வைக்கின்றனர்.

ஆகஸ்ட் 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இந்த வீடியோக்களை நாம் பார்த்தவுடனே டவுன்லோடு செய்ய முடியாது. ஸ்டேட்டஸ் SAVER என்ற செயலி மூலம் டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது புதிய முறையில் வீடியோக்களை டவுன்லோடு செய்யலாம். மேலும் ஆன்ட்ராய்டு மொபைல் போனில் இருந்து மற்றவர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸினை டவுன்லோடு செய்யும் வழிமுறைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

WhatsApp Status டவுன்லோடு செய்யும் முறைகள் :
  • முதலில் Google Play Store ல் இருந்து Google Files என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
  • Google Files செயலியில் Settings ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் Show Hidden Files என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
  • அதன் பிறகு, உங்கள் ஸ்மார்ட்போனின் File manager க்கு செல்ல வேண்டும்.
  • அடுத்ததாக Internal Storage – WhatsApp – Media – Status என்பதைக் கிளிக் செய்யவும். அதில் நீங்கள் வாட்ஸ் அப்பில் பார்த்த வீடியோக்கள் திரையிடப்படும். அதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!