காஷ்மீர் முதல் தமிழகம் வரை பள்ளிகள் திறப்பு – மாநில வாரியான தகவல்கள்!!

0
காஷ்மீர் முதல் தமிழகம் வரை பள்ளிகள் திறப்பு - மாநில வாரியான தகவல்கள்!!
காஷ்மீர் முதல் தமிழகம் வரை பள்ளிகள் திறப்பு - மாநில வாரியான தகவல்கள்!!
காஷ்மீர் முதல் தமிழகம் வரை பள்ளிகள் திறப்பு – மாநில வாரியான தகவல்கள்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. அப்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பு பற்றி மாநில அரசுகள் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் அதிர்வலையை ஏற்படுத்த தொடங்கியது. இதனால் பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் கடைபிடிக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கடைகள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் செயல்பாடுகளை மாநில அரசுகள் அனுமதிக்க தொடங்கியுள்ளது.

தமிழக நெசவாளர்களுக்கு ரூ.3000 கொரோனா நிவாரணம் – அரசிடம் கோரிக்கை!

புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தொடங்கி விட்டது. பள்ளிகள் மீண்டும் திறப்பது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் பற்றி ஆய்வுகளுக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்குவது பற்றி முடிவுகள் அறிவிக்கப்படும். மாநில வாரியாக பள்ளிகள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பீகார்:

பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று குறித்தான நிலைமை சீராக்கி வருவதாக கல்வி அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி அறிவித்துள்ளார். ஏப்ரல் 5 முதல் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. கல்லூரிகளை மட்டும் முதல் கட்டமாக மீண்டும் ஜூலை 1 முதல் திறக்க மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

டெல்லி:

கொரோனா தொற்று பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம்:

உத்தரபிரதேசத்தில் அடிப்படை கல்வி வாரிய பள்ளிகள் ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. , மாணவர் சேர்க்கை மற்றும் புத்தக விநியோகம் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

தமிழ்நாடு:

தமிழகத்தில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக மாநில அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், மாணவர்களுக்கு தொடர்ந்து கற்றல் தொடர்பான பணிகளை கல்வி டிவி வழியாகவும், வாட்ஸ்அப் போன்ற ஆன்லைன் ஊடகங்கள் மூலம் வகுப்புகளை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஹரியானா:

கோடை விடுமுறைகள் காரணமாக ஹரியானாவில் பள்ளிகள் ஜூன் 30 வரை மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகளை மீண்டும் தொடங்குவது குறித்து மாநில அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ஜம்மு-காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் ஜூன் 30 வரை மூடப்படும். கொரோனா பரவல் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பான மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா:

கோவிட் -19 தொற்று பரவல் குறித்து பரிசீலித்த பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை ஜூன் 20 வரை தெலுங்கானா அரசு நீட்டித்துள்ளது. முன்னதாக, இது மே 31 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தது. பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

அசாம்:

அனைத்து இடைநிலைக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் பி கல்யாண் சக்ரவர்த்தி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் என்றும், நோய் பரவலை கட்டுப்படுத்தவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் தற்போதைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களில் அனைத்து கோவிட் -19 பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஜூலை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here