மாநில செய்திகள் – ஆகஸ்ட் 2019

0
மாநில செய்திகள் - ஆகஸ்ட் 2019
மாநில செய்திகள் - ஆகஸ்ட் 2019

மாநில செய்திகள் – ஆகஸ்ட் 2019

இங்கு ஆகஸ்ட் மாதத்தின் மாநில செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட்  2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஆகஸ்ட் 2019

ஆந்திரப் பிரதேசம்

தலைநகரம் முதல்வர் ஆளுநர்
ஹைதராபாத்  (அமராவதி) ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி ஸ்ரீ பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன்

ரைத்து பரோசா திட்டம்

 • ‘ரைத்து பரோசா’திட்டம் 13,125 கோடி செலவில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், அனைத்து விவசாயிகளுக்கும் (குத்தகைதாரர் விவசாயிகள் உட்பட) விதைப்பு (ரபி மற்றும் கரீஃப்) பருவங்கள் தொடங்குவதற்கு முன்பே ஒரு வருடத்திற்கு ரூ.12,500 ஊக்கத்தொகை அல்லது உள்ளீட்டு மானியமாக கிடைக்கும்.

அசாம்

தலைநகரம் முதல்வர் ஆளுநர்
டிஸ்பூர் சர்பானந்தா சோனோவால் ஜெகதீஷ் முகி

அசாமின் முதல் சி.என்.ஜி எரிபொருள் நிலையம்

 • அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், திப்ருகரில் மாநிலத்தின் முதல் சி.என்.ஜி எரிபொருள் நிலையத்தை திறந்து வைத்தார். மாநிலத்தை காற்று மாசுபாட்டிலிருந்து விடுவிப்பதற்கும், சுத்தமான மற்றும் பசுமையான எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அனைத்து மாவட்டங்களிலும் சி.என்.ஜி எரிபொருள் நிலையம் அமைப்பதற்கான ஒரு வரைபடத்தை அரசாங்கம் தயாரித்து வருகிறது தெரிவித்தார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அசாமின் தீப்பர் பீலுக்கான சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலக் குறியீட்டை நாடியுள்ளது

 • குவஹாத்தியின் மேற்கு விளிம்பில் உள்ள தீப்பர் பீலைச் சுற்றியுள்ள பகுதியை ஒரு முக்கிய ஈரநிலமாகவும், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) அசாம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தீப்பர் பீல் ஒரு ‘முக்கியமான பறவை பகுதி’ மற்றும் ராம்சார் தளமாகும் மேலும் அதன் அருகில் ரிசர்வ் காடுகளையும் கொண்டுள்ளது.சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என்பது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியை சுற்றி 10 கி.மீ வரை இடையக மண்டலமாக அறிவித்து தொழில்துறை மற்றும் பிற மனித நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறது.

அசாம்அரசு செப்டம்பர் 1 முதல் 200 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை செயல்படுத்தவுள்ளது

 • அசாமில் செப்டம்பர் 1 முதல் 200 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் செயல்படும் என்று உள்துறை மற்றும் அரசியல் துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா தெரிவித்தார். அவர் கூறியதாவது ஒருவரின் பெயர் என்.ஆர்.சியில் தோன்றவில்லை என்றால், அவர் வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின் முன் மேல்முறையீடு செய்யலாம் மேலும் இந்த தீர்ப்பாயங்கள் மேல்முறையீட்டை 60 நாட்களுக்குள் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

அருணாச்சல பிரதேசம்

தலைநகரம் முதல்வர் ஆளுநர்
இட்டாநகர் பெமா காண்டு பி. டி. மிஸ்ரா.

அருணாச்சல பிரதேச மாநில உள்துறை அமைச்சர் கலவர எதிர்ப்பு கட்டுப்பாட்டு வாகனம் ‘வஜ்ரா’வை கோடி அசைத்து தொடங்கி வைத்தார்

 • அருணாச்சல பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பமாங் பெலிக்ஸ் இட்டா நகரில் உள்ள போலீஸ் தலைமையகத்திலிருந்து வஜ்ரா என்றும் அழைக்கப்படும் ஐந்து கலவர எதிர்ப்பு போலிஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்துள்ளார். அம்மாநில காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட கலவர எதிர்ப்பு வாகனங்களின் இது முதல் தொகுப்பாகும்.

 ஹோலோங்கி விமான நிலையம் 2022 மார்ச் 31 க்குள் கட்டி முடிக்கப்படும்

 • இட்டாநகரில் உள்ள ஹோலோங்கி விமான நிலையம் 2022 மார்ச் 31 ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். இந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி இட்டாநகருக்கு அருகிலுள்ள ஹோலோங்கியில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

கர்நாடகம்

தலைநகரம்                      முதல்வர் ஆளுநர்
பெங்களூரு பி.எஸ்.யெடியூரப்பா வஜுபாய் வாலா

வர்ஷா தாரே மேக விதைப்பு திட்டம்

 • துணை ஆணையர் எம். தீபா கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் வர்ஷா தாரே மேக விதைப்பு திட்டத்தை முறையாக கர்நாடகாவின் ஹுப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கி வைத்தார். மூன்று மாத கால இந்த திட்டம் வடக்கு கர்நாடகாவில் மழையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மைசூரு அரசு விரைவில் மரம் கணக்கெடுப்பு நடத்த உள்ளது

 • அடுத்த சில வாரங்களுக்குள் மரங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நகரத்தின் பசுமையை உயர்த்துவதற்காக கர்நாடக வனத்துறை முதல் முறையாக மர கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது. இந்த கணக்கெடுப்பு மரங்களின் எண்ணிக்கை மற்றும் மைசூரீன் பசுமை அளவுகளை மதிப்பிட உதவும்.

 ஜம்மு & காஷ்மீர்

தலைநகரம் ஆளுநர்
ஸ்ரீநகர் சத்ய பால் மாலிக்

இந்திய ராணுவம் ஜம்மு & காஷ்மீரில் 45 இராணுவ நல்லெண்ண பள்ளிகளை நிறுவியது

 • ஜம்மு-காஷ்மீரில், நல்லெண்ண முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய இராணுவம் 45 இராணுவ நல்லெண்ண பள்ளிகளை நிறுவியுள்ளது, இதில் தற்போது 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த இராணுவ நல்லெண்ண பள்ளிகளில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக தங்கள் படிப்பைத் தொடர அனுமதி வழங்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐடிஐக்கள் அமைக்கப்படும்

 • ஜம்மு-காஷ்மீரில், ஆளுநர் சத்யபால் மாலிக், ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்கு திறன்களை வழங்குவதற்கும் தொழில் பயிற்சி அளிப்பதற்கும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஸ்ரீநகரில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அடுத்த சில மாதங்களில் பல்வேறு அரசு துறைகளில் 50000 காலியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.

குஜராத்

தலைநகரம்                      முதல்வர் ஆளுநர்
காந்திநகர் விஜய் ரூபனி ஆச்சார்யா தேவ் வ்ரத்

புதிய தொழில்துறை கொள்கையை வகுக்க 10 பணிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன

 • குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கையை வகுப்பதற்கான உள்ளீடுகளை ஆய்வு செய்ய, மதிப்பாய்வு செய்ய மற்றும் பரிந்துரைக்க 10 பணிக்குழுக்களை அமைத்துள்ளார். மாநிலத்தின் தற்போதைய தொழில்துறை கொள்கை 2015 இல் செயல்படுத்தப்பட்டது. தலைமை செயலாளர் ஜே.என்.சிங் தலைமையில் இந்தப் பணிக்குழுக்கள் செயல்படும்.

குஜராத்தில் முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கப்படவுள்ளது

 • குஜராத்தில் முதல் மத்திய வேதியியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிஐசிஇடி) அமைக்கப்படும் என்று மத்திய இரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளின் முதல் இயக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்

 • குஜராத்தின் அகமதாபாத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார பேருந்துகளின் முதல் இயக்கத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அகமதாபாத்தில் இ-பஸ்களுக்கான நாட்டின் முதல் தானியங்கி பேட்டரி சார்ஜிங் மற்றும் இடமாற்று நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். திரு. அமித் ஷா 18 மின்சார பேருந்துகளையும் பேட்டரி இடமாற்று தொழில்நுட்ப வசதியுடன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கேரளம்

தலைநகரம்                      முதல்வர் ஆளுநர்
திருவனந்தபுரம் பினராயி விஜயன் பி.சதாசிவம்

நேரு டிராபி படகு பந்தயம்

 • நேரு டிராபி படகு பந்தயத்தின் 67 வது பதிப்பின் போது பச்சை நெறிமுறை கண்டிப்பாக செயல்படுத்தப்படும். படகுப் போட்டி ஆகஸ்ட் 10 ஆம் தேதி கேரளாவின் புன்னமடா ஏரியில் நடைபெறவுள்ளது. நேரு கோப்பையில் 23 பாம்பு படகுகள் உட்பட மொத்தம் 79 படகுகள் பங்கேற்கவுள்ளன.

மலையாள மனோரமா கான்க்ளேவ் 2019

 • பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி கொச்சியில் நடந்த மலையாள மனோரமா செய்தி மாநாட்டில் 2019 ஐ வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். கான்க்ளேவின் தீம் – “புதிய இந்தியா. புதிய இந்தியா பங்கேற்பு ஜனநாயகம், குடிமக்களை மையமாகக் கொண்ட அரசாங்கம் மற்றும் சுறுசுறுப்பான குடிமக்கள் பற்றியது என்பதை வலியுறுத்தியது.

மகாராஷ்டிரா

தலைநகரம்              முதல்வர் ஆளுநர்
மும்பை தேவேந்திர ஃபட்னாவிஸ் சென்னமணி வித்யாசாகர் ராவ்

தான்சா, துங்கரேஷ்வர் சரணாலயங்கள் சூழல் உணர்திறன் மண்டலங்களாக அறிவிக்கப்படுகின்றன

 • மகாராஷ்டிராவில் உள்ள துங்கரேஷ்வர் மற்றும் தான்சா வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக (ESZ) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்று அமைச்சகம் அறிவித்துள்ளது .தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள சில நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

மகாராஷ்டிராவில் பங்கர் அருங்காட்சியகம்

 • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் “பங்கர்” அருங்காட்சியகத்தை மும்பையில் உள்ள ராஜ்பவனில் திறந்து வைத்தார். பங்கர் அருங்காட்சியகம் சுமார் 15,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட அருங்காட்சியமாகும். இந்த ஆண்டு இறுதியில் ஆன்லைன் முன்பதிவு மூலம் இந்த அருங்காட்சியகம் பொது மக்களுக்காக திறக்கப்பட உள்ளது.

எம்.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளுக்கான நேரடி கண்காணிப்பு முறை அறிமுகம்

 • மகாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர் திவாகர் ரோட்டே எம்.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளுக்கான நேரடி கண்காணிப்பு முறையைத் தொடங்கினார், இதனால் மக்கள் தங்கள் பயணத்தைப் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பெற முடியும். மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மொத்தம் 18,000 பேருந்துகளைக் கொண்டுள்ளதாகவும் மேலும் அதில் தினமும் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

நாக்பூரில் கோரேவாடா சர்வதேச உயிரியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது

 • நாக்பூரின் கோரேவாடாவில் உள்ள சர்வதேச தர மிருகக்காட்சிசாலையும் பயோபார்க்கும் நிறுவ அரசாங்கம் முடிவெடுத்துள்ளது . காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர், “மிருகக்காட்சிசாலையில் பயோ பார்க், இந்தியன் சஃபாரி, ஆப்பிரிக்க சஃபாரி, இரவு சஃபாரி, ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் போன்றவை செய்யப்படும் என்று கூறினார்.

மத்தியப்பிரதேசம்

தலைநகரம்              முதல்வர் ஆளுநர்
போபால் கமல்நாத் ஆனந்திபென் படேல்

பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோஹியா அமெரிக்காவின் கேடலினா சேனலைக் கடந்தார்

 • மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திவ்யாங் சதேந்திர சிங் லோஹியா அமெரிக்காவின் கேடலினா சேனலைக் கடந்த முதல் ஆசிய நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சதேந்திரா ஆங்கிலம் மற்றும் கேடலினா சேனல்களைக் கடந்து ஆசிய சாதனையையும் வைத்திருக்கிறார்.

 மேற்கு வங்காளம்

தலைநகரம்              முதல்வர் ஆளுநர்
கொல்கத்தா மம்தா பானர்ஜி ஜகதீப் தங்கர்

“சேவ் க்ரீன் ஸ்டே கிளீன்” விழிப்புணர்வு பிரச்சாரம்

 • மேற்கு வங்க அரசு பசுமையை பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கும் கொல்கத்தாவில் “சேவ் க்ரீன் ஸ்டே கிளீன்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு

தலைநகரம்              முதல்வர் ஆளுநர்
சென்னை எடப்பாடி கே பழனிசாமி பன்வாரிலால் புரோஹித்

 கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வளைய கிணறு

 • கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 45 நாட்களுக்குப் பிறகு, ஒரு வளையக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1.5 அடி விட்டம் கொண்ட வளையக் கிணறு டெரகோட்டாவால் செய்யப்பட்டது. இதுவரை ஐந்து வளையக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வளையக் கிணறு என்பது அந்தக் காலத்தின் மேம்பட்ட நீர் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் ஒரு குறிகாட்டியாகும்.

ஓரு மனிதன் ஓரு இயக்கம் கலைஞர் மு. கருணாநிதி ‘ என்ற புத்தகம்

 • ‘ஓரு மனிதன் ஓரு இயக்கம் கலைஞர் மு. கருணாநிதி ‘ என்ற புத்தகத்தை, தி இந்து குழுவின் வெளியீடான ஃப்ரண்ட்லைன் பத்திரிகை வெளியிட்டது, இப்புத்தகத்தில் ஒரு நபர் எவ்வாறு ஒரு இயக்கமாக மாற முடியும் மேலும் ஜனநாயகத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவது பற்றி அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் கருவியாகவும் செயல்பட முடியும் என்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன .

டி.கார்த்திகேயன் சிஎம்டிஏ வின்  உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார்

 • தமிழ்நாடு மாநில அரசு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக டி. கார்த்திகேயனை நியமித்துள்ளது. இவர் முன்னதாக நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்தார்.

எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 30 வது ஆண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது

 • எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 30 வது ஆண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த அறக்கட்டளை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனால் 1988 இல் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒரு சில வெளிநாடுகளில் இந்த அறக்கட்டளை ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

பழனி பஞ்சமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது

 • பழனி முருகன் கோவில் பிரசாதமான புகழ்பெற்ற பழணி பஞ்சமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு கோயில் ‘பிரசாதத்திற்கு ’ புவிசார் குறியீடுவழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

தமிழ்நாடு கல்வித் துறை மாணவர்களுக்காக பிரத்யேக 24 மணி நேர தொலைக்காட்சி சேனலைத் தொடங்கியது

 • பள்ளி மாணவர்களுக்காக 24 மணி நேர பிரத்யேக தொலைக்காட்சி சேனலை தமிழகத்தில் கல்வித் துறை தொடங்கியுள்ளது. சிவில் சர்வீசஸ், பாதுகாப்புப் படைகள் மற்றும் வங்கிகளில் சேருவதற்கான நேர்காணல்கள் மற்றும் ஊக்கத் திட்டங்கள் தொலைக்காட்சியால் தொழில் வழிகாட்டுதலின் ஒரு வடிவமாக ஒளிபரப்பப்படும்.

சென்னையில் முதல் மின்சார பஸ்

 • சென்னையில் முதல் மின்சார பஸ்ஸை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தொடங்கிவைத்தார். இது மத்திய ரயில் நிலையத்திலிருந்து திருவன்மியூர் வரை ஒரு நாளைக்கு நான்கு பயணங்கள் என்று சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது. இது ஜி.பி.எஸ் மற்றும் தீ கண்டறிதல் மற்றும் அடக்குமுறை அமைப்பு போன்ற உள்ளமைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இதை போக்குவரத்து அதிகாரிகள் தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.

திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலை புவிசார் குறியீடு பெற்றது

 • திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைக்கு சென்னையில் உள்ள புவியியல் குறிப்புகள் பதிவேட்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. புவியியல் குறிகாட்டிகளின் துணை பதிவாளர் சின்னராஜா ஜி. நாயுடு, இந்த இரண்டு தயாரிப்புகளும் சந்தையில் தங்கள் விற்பனையை இழந்து வருவதாகவும், புவிசார் குறியீடு அவைகளுக்கு சில அங்கீகாரங்களைப் பெற உதவும் என்றும் கூறினார்.

செப்டம்பர் 2 முதல் ‘ஏக் பாரத்-விஜய் பாரத்’

 • கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடல் ஆகியவற்றின் திரி சந்திப்பில் ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. விவேகானந்தர் பாறை நினைவிடத்தின் 50 வது ஆண்டை நினைவுகூரும் வகையில், ஒரு முக்கிய தொடர்புத் திட்டமான “ஏக் பாரத்-விஜய் பாரத்” செப்டம்பர் 2 முதல் நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2 முதல் தனித்துவமான பழங்குடி சூழல் சுற்றுலா திட்டம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது

 • தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் தனித்துவமான பழங்குடி சூழல் சுற்றுலா திட்டம் செப்டம்பர் 2 முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
 • சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்தை சுற்றுலா மற்றும் எஸ்சி / எஸ்டி நலத்துறைகள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன.

தில்லி

முதல்வர் ஆளுநர்
அரவிந்த் கெஜ்ரிவால் அனில் பைஜால்

இந்திய விமானப்படையின் வசதி மற்றும் விளம்பர பெவிலியனை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திறந்து வைத்தார்

 • மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் புது தில்லியில் உள்ள தேசிய பால் பவனில் இந்திய விமானப்படை வசதி மற்றும் விளம்பர பெவிலியனை திறந்து வைத்தார். இந்திய விமானப்படையில் சேர மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பெவிலியனை இந்திய விமானப்படை அமைத்துள்ளது.

ஐ.ஐ.டி டெல்லியில் தொழில்நுட்ப கண்காட்சியை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திறந்து வைத்தார்.

 • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சமீபத்திய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஐ.ஐ.டி டெல்லியில் தொழில்நுட்ப கண்காட்சியைத் தொடங்கினார். நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களின் 80 க்கும் மேற்பட்ட சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் 90 ஆராய்ச்சி சுவரொட்டிகள், புலனாய்வாளர்கள் உருவாக்கிய முன்மாதிரிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

ஜவுளி அமைச்சர் தேசிய கைவினை அருங்காட்சியகத்தில் கலைக்கூடத்தை திறந்து வைத்தார்

 • புது டெல்லியில் உள்ள தேசிய கைவினை அருங்காட்சியகத்தில் ஜவுளி தொகுப்பை மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி திறந்து வைத்தார். ஜவுளி தொகுப்பில் 30 க்கும் மேற்பட்ட மரபுகளின் வகைகளாக பிரிக்கப்பட்ட 230 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஜவுளி சேகரிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

“ஆபரேஷன் நம்பர் பிளேட் ஐ ரயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்தியுள்ளது

 • ரயில்வே வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வாகனங்களையும், சுற்றும் பகுதி, பார்க்கிங் மற்றும் “நோ பார்க்கிங்” பகுதிகளில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் சரிபார்க்க இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) ஆபரேஷன் “நம்பர் பிளேட்” என்ற ஒரு குறியீட்டு பெயரைக் கொண்ட ஒரு சிறப்பு இயக்ககத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வதன் என்ற தேசபக்தி பாடலை ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்

 • புது தில்லியில் 2019 சுதந்திர தினத்தை முன்னிட்டு தூர்தர்ஷன் தயாரித்த “வதன்” என்ற தேசபக்தி பாடலை மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்த பாடல் அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் 2 வின்  பின்னணியில் உள்ள உறுதியும்  பார்வையும் மேலும்  அரசாங்கத்தின் பல தடைகளை  உடைக்கும் முயற்சிகளையும் எடுத்துக்காட்டுகிறது.

உலகின் முதல் முக பயோ-மெட்ரிக் தரவு அடிப்படையிலான கடற்படை அடையாள ஆவணம்

 • கடற்படையினரின் முக பயோ மெட்ரிக் தரவைக் கைப்பற்றி, பயோமெட்ரிக் கடற்படை அடையாள ஆவணத்தை (பி.எஸ்.ஐ.டி) வெளியிடும் உலகின் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது. கப்பல் மற்றும் வேதியியல் மற்றும் உரங்கள் துறையின் மாநில அமைச்சரான ஸ்ரீ மன்சுக் மண்டவியா இந்த திட்டத்தை புதுதில்லியில் தொடங்கி வைத்தார். புதிய பி.எஸ்.ஐ.டி அட்டைகளையும் ஐந்து இந்திய கடற்படையினரிடம் அவர் ஒப்படைத்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற சுகாதார ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது

 • ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் சேகாவத் “ஸ்வச் சர்வேஷன் கிராமீன் 2019” என்ற மிகப்பெரிய கிராமப்புற சுகாதார ஆய்வை தலைநகர் டெல்லியில் தொடங்கினார். இந்த ஆய்வு ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 30, 2019 வரை, இந்தியா முழுவதும் 698 மாவட்டங்களில் 17,450 கிராமங்கள் மற்றும் 87,250 பொது இடங்கள், அதாவது பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பொது சுகாதார மையங்கள், ஹாட் / பஜார் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பை நடத்தவுள்ளது, இது இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற சுகாதார கணக்கெடுப்பாகும்.

பிபிஆர்டியின் 49 வது தொடக்க நாள்

 • மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா ஆகஸ்ட் 28 அன்று புதுதில்லியில் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (பிபிஆர்டி) 49 வது தொடக்க நாள் விழாவில் தலைமை விருந்தினராக தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிபிஆர்டியின் பொன்விழா சின்னத்தை ஸ்ரீ ஷா வெளியிட்டார். போலீஸ் பயிற்சியில் சிறந்து விளங்குவதற்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கத்தையும், இந்தி எழுத்தாளருக்கு பண்டிட் கோவிந்த் பல்லப் பந்த் விருதையும் வழங்கினார்.

ஃபிட் இந்தியா இயக்கத்தை பிரதமர் தொடங்கினார்

 • தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நடந்த விழாவில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கினார். மேஜர் தியன்சந்தின் பிறந்த நாளில் இந்த மக்கள் இயக்கத்தைத் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தனது விளையாட்டு மற்றும் நுட்பங்களால் உலகை கவர்ந்த இந்தியாவின் விளையாட்டு சின்னமான மேஜர் தியான்சந்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

பஞ்சாப்

தலைநகரம்             

முதல்வர்

ஆளுநர்
அரியானா அமரீந்தர் சிங் வி.பி. சிங் பட்னோர்

விராசத்-இ-கல்சா அருங்காட்சியகம் ஆசியா புத்தகத்தில் இடம் பெறத் தயாராக உள்ளது.

 • பஞ்சாபின் ஆனந்த்பூர் சாஹிப் நகரில் உள்ள விராசத்-இ-கல்சா அருங்காட்சியகம் ஒரே நாளில் இந்திய துணைக் கண்டத்தில் அதிக மக்கள் பார்வையிட்ட அருங்காட்சியகமாக ஆசியா புத்தகத்தில் இடம் பெறத் தயாராக உள்ளது. ஆசியா புக் ஆஃப் ரெகார்டஸுடன் சேர்த்து, சாதனை புத்தகங்களில் அருங்காட்சியகத்திற்கான மூன்றாவது நுழைவு இதுவாகும். முன்னதாக, விராசத்-இ-கல்சா, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் மற்றும்  லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பிப்ரவரி 2019 பதிப்பிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு 28000 வேளாண் இயந்திரங்களை வழங்கவுள்ளது

 • பஞ்சாப்பை பண்ணை கழிவுகளை எரிக்காத மாநிலமாக மாற்றும் நோக்கில், பஞ்சாப் விவசாயத் துறை, விவசாயிகளுக்கு 28000 க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் / பண்ணை உபகரணங்களை வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கியுள்ளது.

உத்தரபிரதேசம்

தலைநகரம்              முதல்வர் ஆளுநர்
கொல்கத்தா மம்தா பானர்ஜி ஜகதீப் தங்கர்

உத்தரபிரதேச அரசு நெதர்லாந்துடன் பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரிவுபடுத்தியது

 • உத்தரபிரதேச அரசும் நெதர்லாந்தும் பல துறைகளில் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளன.முன்னதாக கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், திடக்கழிவு மேலாண்மை, இடஞ்சார்ந்த திட்டமிடல், நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பது மற்றும் இயக்கம் திட்டமிடல் உள்ளிட்ட துறைகளில் அறிவு மற்றும் நுட்பங்களின் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ளது.

கான்பூரில் “புதுப்பிக்கப்பட்ட நவீன அலிம்கோ புரோஸ்டெடிக் & ஆர்த்தோடிக் மையம்”

 • உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள அலிம்கோ தலைமையகத்தின் ‘புதுப்பிக்கப்பட்ட அலிம்கோ ஆர்த்தோடிக்ஸ் மற்றும் புரோஸ்டெடிக் சென்டரை (ஏஓபிசி) மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஸ்ரீ தாவர்சந்த் கெஹ்லோட் திறந்து வைத்தார்.

 இராஜஸ்தான்

தலைநகரம்                      முதல்வர் ஆளுநர்
ஜெய்ப்பூர் அசோக் அசோக் கெஹ்லோட் கல்யாண் சிங்

கவுரவக் கொலைகள் மற்றும் கும்பல் கொலைஆகியவற்றைக் கட்டுப்படுத்த ராஜஸ்தான் சட்டமன்றம் புதிய மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது

 • மாநிலத்தில் கவுரவக் கொலைகள் மற்றும் கும்பல் கொலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ராஜஸ்தான் சட்டமன்றம் இரண்டு முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது, கும்பல் கொலை மசோதா, 2019 ல் இருந்து பாதுகாப்பு மற்றும் ‘கவுரவம் மற்றும் பாரம்பரிய மசோதா, 2019 என்ற பெயரில் திருமண கூட்டணிகளின் சுதந்திரத்துடன் தலையிடுவதற்கான ராஜஸ்தான் தடை’ 2019 என்ற இரண்டு மசோதாக்கள் சட்டமன்றத்தால் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Download PDF

Current Affairs 2019 Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!