
ஒன்றிய அரசின் கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதிக்க தடை – மதுரை உயர்நீதிமன்ற கிளை!
தமிழகத்தில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு மாநில உள்ளாட்சி அமைப்புகள் வரி விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
வரி விதிக்க தடை:
தமிழகத்தில் தனிநபரின் சொந்த கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, சொத்து வரி என்பது ஒரு வருடாந்திர வரியாகும். இது ஒரு நில உரிமையாளரால் அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட உள்ளூர் அமைப்பு அல்லது நகராட்சி நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டும். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குமிளங்குளம் ஊராட்சியில் விருதுநகர் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த அலுவலகம் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த கட்டிடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வரி விதித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என விருதுநகர் மாவட்ட பிஎஸ்என்எல் மேலாளர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் தெரிவித்துள்ளதாவது, விருதுநகர் பிஎஸ்என்எல் அலுவலகம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மத்திய அரசின் கட்டிடத்திற்கு மாநில உள்ளாட்சி நிர்வாகம் வரி விதிப்பது விதிகளுக்கு முரணானது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கூடிய விரைவில் Jio Phone 5G அறிமுகம் – அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
மேலும் இந்த அலுவலகம் மத்திய அரசின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, பிஎஸ்என்எல் நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும் இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்படுவதால் வரி விதிக்க முடியாது. வருங்காலத்தில் இந்த கட்டிடம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு பெயர் மாற்றப்பட்டால் ஊராட்சி நிர்வாகம் வரி விதிக்கலாம் என்று கூறியுள்ளார். அத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் வரி விதித்த நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.