இந்தியாவில் கூடிய விரைவில் Jio Phone 5G அறிமுகம் – அறிவிப்பு வெளியீடு!

0
இந்தியாவில் கூடிய விரைவில் Jio Phone 5G அறிமுகம் - அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் கூடிய விரைவில் Jio Phone 5G அறிமுகம் - அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் கூடிய விரைவில் Jio Phone 5G அறிமுகம் – அறிவிப்பு வெளியீடு!

தற்போது தான் ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் பெற்று தனக்கு சொந்தமாக்கியது. இந்நிலையில், கூடிய விரைவில் இந்தியாவில் Jio Phone 5G அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jio Phone 5G:

நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் கடும் போட்டிகளுக்கு நடுவே 5ஜி அலைக்கற்றையை 1,50,173 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில், எப்போது ஜியோ 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய முன்னணி நிறுவனங்களும் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம் கூடிய விரைவில் ஜியோ போன் 5ஜி யை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது வரைக்கும் ஜியோ நிறுவனம் ஜியோ போன் 5ஜி யை அறிமுகம் செய்வது குறித்தான எந்த தகவலையும் வெளியிடவில்லை. எப்படியும் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜியோ போன் 5G அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விலை ரூ.12,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? முக்கிய தகவல் வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும், ஜியோ போன் 5ஜி Jio Phone Next போலவே வரம்பற்ற கால் அழைப்புகள் போலவே வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜியோ போன் 5ஜி யில் 6.5-இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே கொடுக்கப்படலாம் எனவும், Snapdragon 480 5G SOC உடன் 4G ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ்ஜுடன் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, ஜியோ போன் 5ஜி யில் 13 எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் பின்பக்கத்தில் இரட்டை கேமரா அமைப்புகளுடனும், முன்பக்கத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here