அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!

0
அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் பணி நேரங்களில் தேவையற்ற காரணங்களுக்கு செல்போன்களை பயன்படுத்த கூடாது. பணி தொடர்பாக உரையாட அலுவலகத்தின் தரைவழி தொலைபேசியை பயன்படுத்த வேண்டும் என அரசு அலுவலகங்களுக்கு பொதுத்துறை நிர்வாகத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

செல்போன் பயன்படுத்த தடை:

இந்தியா முழுவதும் செல்போன்கள் பயன்பாடு பெருகி விட்டது. படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். இதில் ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். அதில் அதிக நேரங்களை செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதலங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஊழியர்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஜூலை 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அலுவலக நேரங்களில் வேலைகளை சரியாக செய்யாமல் அதிகம் தொலைபேசிகளில் நேரம் செலவிட்டு வருகின்றனர். சிலர் உணவுவேளை நேரங்களிலும் உணவு உண்ணாமல் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதை கண்காணிக்க அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் அதிகாரிகளை நிர்வாகம் நியமித்து வருகிறது. ஆனாலும் ஊழியர்களும், அதிகாரிகளும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இந்த தொலைபேசி பயன்பாட்டால் அலுவலர்களுக்கு வேலைகளில் கவனம் இல்லை என நிர்வாகம் குற்றம் சாட்டுகிறது.

தேசிய அளவில் தமிழகம் முதலிடம் – கொரோனா தடுப்பூசி வீணடிப்பு தவிர்ப்பு!

அதனால் மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் பணி நேரங்களிலும் தேவையற்ற காரணங்களுக்கு செல்போன்களை பயன்படுத்த கூடாது. பணி தொடர்பாக உரையாட அலுவலகத்தின் தரைவழி தொலைபேசியை பயன்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு அம்மாநில பொது நிர்வாகத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பணி நேரத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவசர காரணங்களுக்கான செல்போன் உரையாடல்கள் அதிக சத்தம் இன்றியும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here