1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும் – மாநில அரசு அறிவிப்பு!
மறு அறிவிப்பு வரும் வரை ஷில்லாங் மற்றும் ஷில்லாங் நகர்ப்புற ஒருங்கிணைப்பில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:
நாட்டில் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு தனது 3ம் அலையை தொடங்கியிருக்கிறது. இந்த முறை ஆரம்ப நாட்களிலேயே பாதிப்பு எண்ணிக்கையானது அதிக அளவில் இருப்பதால் பாதுகாப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மேலும், பகல் நேரங்களிலும் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இதனால் மாணவர்களின் நலன் கருதி பல மாநிலங்களிலும் படிப்படியாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு / திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஷில்லாங் அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை ஷில்லாங் மற்றும் ஷில்லாங் நகர்ப்புற ஒருங்கிணைப்பில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதி அளிக்கப்ட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக நேரடி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவாகரத்து வாங்கிய ராதிகா, அப்பாவிற்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
ஆனால் மேலும் அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும், மாற்று நாட்களில் மட்டுமே வகுப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் கலாச்சார கூட்டம் நடத்த அனுமதி இல்லை. மேலும் விளையாட்டு நிகழ்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. கொரோனா பாதிப்பை மதிப்பிடுவதற்கு பணிக்குழுக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மதிப்பிடுவதற்கு பணிக்குழுக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.