ஜனவரி 18 முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜனவரி 18 முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஜனவரி 18 முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!
ஜனவரி 18 முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இரவு நேர ஊரடங்கு:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா என்ற நோய் பரவல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பரவி அதிக பாதிப்புகளை ஏறப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுத்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் விரைவில் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.

TNPSC துறைத்தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் தங்களது மாநிலங்களில் ஏற்படும் தொற்று பரவல் சூழலை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துதல், கூட்டம், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை குறைத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ போட்டியாளருக்கு கொரோனா தொற்று – சீசன் 3 ஒளிபரப்பு நிறுத்தம்?

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மட்டும் 900 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அம்மாநில முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் 50 % பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக ஜனவரி 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!