விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ போட்டியாளருக்கு கொரோனா தொற்று – சீசன் 3 ஒளிபரப்பு நிறுத்தம்?

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' போட்டியாளருக்கு கொரோனா தொற்று - சீசன் 3 ஒளிபரப்பு நிறுத்தம்?
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' போட்டியாளருக்கு கொரோனா தொற்று - சீசன் 3 ஒளிபரப்பு நிறுத்தம்?
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ போட்டியாளருக்கு கொரோனா தொற்று – சீசன் 3 ஒளிபரப்பு நிறுத்தம்?

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்க இருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர் வித்யூலேகாவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி

மக்களின் பேராதரவுடன் 2 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது 3வது சீசனுக்குள் அடியெடுத்து வைக்க இருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையுள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த நிகழ்ச்சிக்கு பேமிலி ஆடியன்ஸ் சற்று அதிகம்.

மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீட்டிலிருந்தே பென்ஷன் பெறலாம்!

இப்படி இருக்க ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்புக்கு மத்தியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி பல்வேறு புத்தம் புதிய போட்டியாளர்களுடன் துவங்க உள்ளது. அந்த வகையில், இம்முறை ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன், அசுரன் அம்மு அபிராமி, வித்யூலேகா, கானா பாடகர் அந்தோணி தாஸ், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, நடிகர்கள் தர்ஷன், சந்தோஷ் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

சமீபத்தில் கூட இந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் லான்ச் எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோ காட்சிகள் சில வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றிருந்தது. மேலும், ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் ‘குக் வித் கோமாளி’ ஒளிபரப்பு ஜனவரி 22 முதல் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

அதாவது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் போட்டியாளரான வித்யூலேகாவுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகை வித்யூலேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தவிர நிகழ்ச்சி குழுவினர் சிலருக்கும் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ‘குக் வித் கோமாளி’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒளிபரப்பு தாமதமாகலாம் என்றும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!