விஜய் டிவி “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சியில் வெற்றியை தட்டி சென்ற சீரியல் இதுவா? ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "ஸ்டார்ட் மியூசிக்" நிகழ்ச்சியில் வெற்றியை தட்டி சென்ற சீரியல் இதுவா? ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சியில் வெற்றியை தட்டி சென்ற சீரியல் இதுவா? ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தனித்துவமான கன்டென்ட் உடன் இருப்பதால் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ஸ்டார்ட் மியூசிக் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட 8 அணிகளில் ராஜா ராணி 2 சீரியல் குழுவினர் வெற்றியை தட்டி சென்று இருக்கின்றனர்.

ஸ்டார்ட் மியூசிக் வெற்றியாளர்:

தமிழ் சின்னத்திரையில் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் வார இறுதி நாட்களில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. சூப்பர் சிங்கர், நீயா நானா, கலக்கப் போவது யாரு, அது இது எது, கிங்க்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், சூப்பர்ஸ்டார் சிங்கர், ஜோடி ஃபன் அன்லிமிட்டட், பிக்பாஸ், மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என மக்களின் விருப்பமான பல சீரியல்கள் இருக்கின்றனர்.

அம்மா ஆலியாவுடன் குதித்து விளையாடிய ஐலா பாப்பா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

அவைகளில் விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை காட்டி வருகின்றனர். இந்நிலையில் பாட்டு, டான்ஸ், காமெடி, சமையல், என விதவிதமான கான்செப்டில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் பாடல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் புது கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் “ஸ்டார்ட் மியூசிக்”. இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களை பிரியங்கா தொகுத்து வழங்கினார். அடுத்த சீசனில் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று விட்டதால் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ‘குக் வித் கோமாளி’, ‘பாக்கியலட்சுமி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘ராஜாராணி2’, ‘கலக்கப்போவது யாரு’ , ‘பாரதி கண்ணம்மா’, ‘தமிழும் சரஸ்வதியும்’ ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டனர். அதில் ‘குக் வித் கோமாளி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘ராஜா ராணி2’, ‘பாரதி கண்ணம்மா’ ஆகிய நான்கு டீம் மட்டுமே செமி பைனலுக்கு முன்னேறியது. அதிலும் ‘பாரதி கண்ணம்மா’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஆகிய இரு அணிகளும் எலிமினேட் ஆன நிலையில், பைனலுக்கு குக் வித் கோமாளி, ‘ராஜா ராணி2’ இரு அணிகளும் தகுதி பெற்றன. இவர்களில் போட்டி போட்டு ராஜா ராணி 2 சீரியல் அணி வெற்றியை தட்டி சென்றது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here