தமிழக அமைச்சரவை துறைகளின் பெயர் மாற்றம் – முக ஸ்டாலின் அறிவிப்பு!!

0
தமிழக அமைச்சரவை துறைகளின் பெயர் மாற்றம் - முக ஸ்டாலின் அறிவிப்பு!!தமிழக அமைச்சரவை துறைகளின் பெயர் மாற்றம் - முக ஸ்டாலின் அறிவிப்பு!!
தமிழக அமைச்சரவை துறைகளின் பெயர் மாற்றம் - முக ஸ்டாலின் அறிவிப்பு!!
தமிழக அமைச்சரவை துறைகளின் பெயர் மாற்றம் – முக ஸ்டாலின் அறிவிப்பு!!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அமைய உள்ள புதிய அமைச்சரவையில் ஒரு சில துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை முக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

துறைகளின் பெயர் மாற்றம்:

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 156 இடங்களில் வென்று அதிக பெரும்பான்மையான கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் தமிழக கவர்னர் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மே 7ம் தேதியான நாளை முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்ய உள்ளார். அவரது தலைமையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைய உள்ள நிலையில் துறைகளின் பெயர்களை மாற்றி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதன்படி, தமிழகத்தின் நீர்த்தேவைக்காக தனியாக ‘நீர்வளத்துறை’ அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகளுக்காக ‘தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத்துறை’ உண்டாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான உரிமை தொடர்பான சமூக நலத்துறை ‘சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? நாளை அமைச்சரவை கூட்டம்!

மீனவர்களின் நலனுக்காக திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த வேண்டிய மீன்வளத்துறை இனி ‘மீன்வளம் – மீனவர் நலத்துறை’ என்று அழைக்கப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை மருத்துவத்தை உள்ளடக்கியது என்பதும், சுகாதாரம் என்பது துப்புரவை குறிக்கோளாக கொண்டதாலும், அந்த துறைக்கு ‘மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சுற்றுசூழல் துறை ‘சுற்றுச்சூழல் – கால நிலை மாற்றத்துறை’ என்றும் மாற்றப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!