மத்திய அரசு வேலை – 20,000 காலிப்பணியிடங்கள் | நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!

0
மத்திய அரசு வேலை - 20,000 காலிப்பணியிடங்கள் | நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!
மத்திய அரசு வேலை - 20,000 காலிப்பணியிடங்கள் | நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!
மத்திய அரசு வேலை – 20,000 காலிப்பணியிடங்கள் | நாளை கடைசி நாள்! உடனே விரையுங்கள்!

SSC CGL 2022 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு வேலையில் சுமார் 20,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் படி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்

SSC CGL தேர்விற்கு காலியாக உள்ள பணியிடங்கள் பற்றி இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 20,000 காலியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த அறிவிப்பின் கீழ் உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் என பல பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Exams Daily Mobile App Download

இந்த 20,000 பணியிடங்களுக்கு Combined Graduate Level தேர்வு மூலம் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

SSC CGL நிறுவனத்தில் வேலைவாய்ப்பில் சேர விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும்.

தற்போது வெளியான இந்த அறிவிப்பில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு பட்டப்படிப்பில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SSC CGL வேலைவாய்ப்பில் சேர Computer Based Examination (Tier-I) ,Tier-II , Tier-III (Descriptive Paper) , Tier-IV (Skill Test) ஆகிய படிநிலைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

LIC of India நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 100 காலிப் பணியிடங்கள் || விண்ணப்பிக்க அக்.8 கடைசி நாள்!

மேலும் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பெண்கள்,SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் SSC-ன் அதிகாரபூர்வ இணையதளம் ssc.nic.in மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 08.10.2022 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!